For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொசு கடிக்குதா... மர்கா தரும் லேசர் பாதுகாப்பு.. 10 லட்சம் டாலர் பணம் கொடுக்கும் கேட்ஸ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொசுக்கள்தான் மனிதர்களின் மிகப் பெரிய எதிரியாக இருக்கும் போல. குறிப்பாக தமிழ்நாட்டில் கொசுத்தொல்லையைத் தாங்க முடியவில்லை. இந்த நிலையில் உலகின் மாபெரும் பணக்காரரான பில் கேட்ஸ், கொசுக்களை ஒழிக்க உதவும் புதிய லேசர் பாதுகாப்புத் திட்டத்துக்காக 10 லட்சம் டாலர் பணத்தை களம் இறக்கியுள்ளார்.

இந்த லேசர் பாதுகாப்புத் திட்டம் என்னவென்றால், இரவில் படுக்கையில் படுத்துத் தூங்கும் நபர்களைச் சுற்றி லேசர் கதிர்கள், அரண் போல வளைத்து நிற்கும். இதைத் தாண்டி ஒரு கொசுக் குஞ்சு கூட வர முடியாதாம்.

மலேரியா ஒழிப்பில் அக்கறை காட்டி வரும் பில் கேட்ஸ், அதன் ஒரு பகுதியாக இந்த லேசர் கொசு ஒழிப்புத் திட்டத்திற்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்.

6 மணிக்கு மேல முடியலையே

6 மணிக்கு மேல முடியலையே

இப்போதெல்லாம் சாயந்திரம் ஆகி விட்டாலே போதும், கொசுக்கள் அழையாத விருந்தாளிகளாக வீடுகளுக்குள் புகுந்து ரத்தம் குடிக்க ஆரம்பித்து விடுகின்றன.

வலை அல்லது மேட்

வலை அல்லது மேட்

கொசுக்களிலிருந்து தப்பிக்க ரிப்பெல்லன்ட் பயன்படுத்துகிறோம். கொசு வத்தியைக் கொளுத்தி வைக்கிறோம். ஸ்பிரே கூட அடிக்கிறோம்.

சீனத்து பேட்

சீனத்து பேட்

இதுபோதாதென்று சில வருடங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து இறக்குமதியான எலக்ட்ரிக் பேட் வேறு வந்து விட்டது. சாயந்திரம் ஆனாலே அத்தனை வீடுகளிலும் பேட்டிங் ஆரம்பித்து விடுகிறது.

ஆனாலும் முடியலையே

ஆனாலும் முடியலையே

ஆனாலும் இந்தக் கொசுக் கூட்டத்தை ஒழிக்க முடியவில்லை. இந்தியாவில் தான் என்று இல்லை. பல நாடுகளிலும் கொசுக்கள் பெரும் பிரச்சினையாகவே உள்ளன.

கொலம்பிய பேராசிரியரின் லேசர் கண்டுபிடிப்பு

கொலம்பிய பேராசிரியரின் லேசர் கண்டுபிடிப்பு

இந்த நிலையில் கொலம்பியாவைச் சேர்ந்த பேராசிரிர் ஒருவர் கொசுக்களை ஒழிக்க லேசர் கதிர்களைப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்துள்ளார்.

பில் கேட்ஸ் ஆதரவு

பில் கேட்ஸ் ஆதரவு

இந்த கண்டுபிடிப்புக்கும், ஆய்வுக்கும் பில் கேட்ஸ் ஆதரவு கொடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பான ஆய்வுக்காக அவர் 10 லட்சம் டாலர் பணத்தையும் கொடுத்துள்ளார்.

லேசர் சுவர்

லேசர் சுவர்

கொலம்பியா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரான ஸபோல்க்ஸ் மர்காவின் கண்டுபிடிப்பு என்னவென்றால், நம்மைச் சுற்றி ஒரு லேசர் சுவரை ஏற்படுத்துவது. இதைத் தாண்டி ஒரு கொசு கூட உள்ளே வர முடியாதாம்.

ஒளி வளையம்

ஒளி வளையம்

படுக்கை அறையில் படுத்திருப்பவர்களைச் சுற்றிலும் இந்த லேசர் கதிர்வீச்சு, ஒரு சுவர் போல காட்சி தரும். இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் நிம்மதியாகப் படுத்துத் தூங்கலாம்.

கொசுக்களைக் குழப்புவதே முக்கிய நோக்கம்

கொசுக்களைக் குழப்புவதே முக்கிய நோக்கம்

கொசுக்களை ஒளியைக் கொண்டு விரட்டியடிப்பதும், கொசுக்களின் உணர் திறனை குழப்பி அவற்றை விரட்டுவதுமே இந்த லேசர் கதிர் பாதுகாப்பு வளையத்தின் சாராம்சமாகும்.

அதிகம் செலவில்லாதது

அதிகம் செலவில்லாதது

இந்த லேசர் பாதுகாப்புத் திட்டமானது அதிக செலவு வைக்காததாகும். மேலும் குறைந்த அளவிலான லேசர் சுவர் மூலம் பெருமளவிலான பகுதியை கவர் செய்ய முடியும்.

2008 முதல்

2008 முதல்

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்துக்காக உதவி வருகிறார் பில் கேட்ஸ். 2008ம் ஆண்டு இந்த ஆய்வுக்காக 1 லட்சம் பவுண்டு பணத்தை பில் கேட்ஸ் கொடுத்தார். தற்போது 10 லட்சம் டாலரை அள்ளிக் கொடுத்துள்ளார்.

கண்டுபிடித்தவருக்கே காரணம் தெரியவில்லை

கண்டுபிடித்தவருக்கே காரணம் தெரியவில்லை

லேசர் பாதுகாப்பு முறையைக் கண்டுபிடித்திருந்தாலும், ஏன் கொசுக்களால் லேசர் கதிர்வீச்சைத் தாண்டி வர முடியவில்லை என்பது மர்காவுக்கே தெரியவில்லையாம்.

ஆப்பிரிக்காவை ஆட்டிப்படைக்கும் மலேரியா

ஆப்பிரிக்காவை ஆட்டிப்படைக்கும் மலேரியா

உலக அளவில் மலேரியாவுக்கு 10 லட்சம் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். இதில், 90 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 85 சதவீதம் பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரம் இந்த லேசரை அஸ்தினாபுரத்துக்கும் அனுப்பி வையுங்க மர்கா.. கொசுத் தொல்லை தாங்க முடியலை மக்கா....!

English summary
The laser system projects a 'wall' of light around a sleeping family - mosquitoes won't cross the barrier, although the scientists are unsure exactly why. Most of us rely on gauze netting or repellent sprays. But a professor from Columbia has developed possibly the ultimate mosquito deterrent - a laser defence system. Bill Gates - whose Foundation is battling the spread of malaria - is so convinced by the idea that he's investing $1 million in it. Columbia University Associate Professor Szabolcs Márka is developing a 'laser wall' that repels any mosquito nearby.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X