For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவியால் காயமடையும் குழந்தைகள்… அமெரிக்காவில் அதிகமாம்.!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டிவி பார்ப்பதன் மூலம் 30 நிமிடத்திற்கு ஒரு குழந்தைகள் காயமடைவதாக அமெரிக்காவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

டிவி பார்த்தால் சந்தோசமும், மகிழ்ச்சியும் தானே வரும் காயம் எப்படி ஏற்படும் என்று கேட்கிறீர்களா? குட்டீஸ்கள் டிவி பார்க்கும் ஆர்வத்தில் அதை இழுத்துப் போட்டுக் கொள்கின்றனர் இதனால் காயம் ஏற்படுகிறது.

குழந்தைகள் காயம்

கடந்த 1990 முதல் 2011ம் ஆண்டு வரை 52 சதவிகித குழந்தைகள் டிவியினால் காயமடைந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது. 1990ம் ஆண்டு 5,445 குழந்தைகள் டிவியினால் காயமடைந்துள்ளனர். அதுவே 2011ம் ஆண்டு 12,300 ஆக உயர்ந்துள்ளது.

இளைஞர்கள் கூடத்தான்

இவர்கள் அனைவருமே 18 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். அதேபோல் 22 வயதிற்கு மேற்பட்ட 68 சதவிகிதம் பேர் டிவியினால் காயமடைந்திருக்கின்றனராம்.

லட்சக்கணக்கானவர்கள்

கடந்த 1990 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3,80,885 குழந்தைகள் டிவியினால் காயமடைந்துள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக 17,000 பேர் அடங்குவர்.

படுகாயமடைந்தவர்கள்

இதில் 2.6 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு படுகாயமடைந்துள்ளனர்.

2க்கும் அதிகமான டிவி

அமெரிக்காவில் 99 சதவிகிதம் பேர் குழந்தைகளுக்காக தனி தொலைக்காட்சி வைத்துள்ளனர். 55 சதவிகிதம் வீடுகளில் 3க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளை வைத்துள்ளனர்.

பழுதான டிவி ஸ்டாண்ட்

1990ம் ஆண்டுக்குப் பின்னர் டிவியின் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் காயங்களும் அதிகரித்துள்ளது. எனவே குழந்தைகள் பாதிக்காத அளவிற்கு அவற்றை கையாளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சரியில்லாத டிவி ஸ்டாண்ட்களில் வைக்கப்படும் டிவிக்கள் விழுந்து குழந்தைகளுக்கு காயம் ஏற்படுகிறது.

குழந்தைகள் மரணம்

2000 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் மட்டும் டிவி மேலே விழுந்து 215 குழந்தைகள் வரை மரணித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கவனம் அவசியம்

டிவி பார்க்கும் போது படுத்துக் கொண்டே பார்க்கும் குழந்தைகளின் கால் பட்டு கூட டிவி நழுவி மேலே விழுந்து மண்டை உடைந்த சம்பவமும் நடந்திருக்கிறது. அதேபோல் டிவி மேல் இருக்கும் ரிமோட்டை எடுக்கும் ஆர்வத்தில் அதை மேலே இழுத்துப் போட்டுக் கொண்ட சம்பவமும் கூட சமீபத்தில் நடந்துள்ளது. எனவே குட்டீஸ்களிடம் இருந்து முட்டாள் பெட்டியை கொஞ்சம் தூரத்திலேயே வைங்களேன்.

English summary
Television sets injure one child every 30 minutes in America, and the rate of emergency room visits is increasing with the popularity of flat-screen TVs, a study said Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X