For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்தடுத்து 12 இடங்களில் கார் குண்டுவெடிப்பு: 47 பேர் பலி: ஈராக்கில் பதட்டம்

Google Oneindia Tamil News

Wave of car bombings in Iraq kills at least 47
பாக்தாத்: ஈராக்கில் இன்று அடுத்தடுத்து தொடர்ச்சியாக 12 இடங்களில் கார் குண்டு வெடித்ததில், 47க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈராக்கில் போர் முடிந்து, தற்போது தான் அமெரிக்க படைகள் வாபஸ் பெற்று வருகின்றன. ஆனால், தொடர்ந்து அங்கு ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே மோதல் தொடர்கிறது.

இந்நிலையில், இன்று காலை ஷியா பிரிவு மக்கள் கூடும் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்தன. தொடர்ந்து வெடித்த 12 கார் குண்டுகளால் அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள் பாதிக்கப்பட்டன.

குண்டுவெடிப்பில் சிக்கி சுமார் 47க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன. இதனால் பலியானோர் எண்ணிக்கை கூடலாம் என அஞ்சப் படுகிறது.

இக்கொடூர தொடர் கார்குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஏப்ரல் முதல் இதுவரை அந்நாட்டில் நடந்த தற்கொலைத் தாக்குதல் மற்றும் கார் குண்டு வெடிப்பு சதிகளில் மட்டும் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A wave of over a dozen car bombings hit central and southern Iraq during morning rush hour on Monday, officials said, killing at least 47 people in the latest coordinated attack by insurgents determined to undermine the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X