For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதிஷை புகழ்ந்த சத்ருகன் சின்ஹா கட்சியில் இருந்து வெளியேறினால் தடுக்க மாட்டோம்: பாஜக

By Siva
Google Oneindia Tamil News

CP Thakur says if Shatrughan Sinha quits BJP, party won't stop him
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பிரதமராகத் தகுதியானவர் என்று கூறிய பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக துணை தலைவர் சி.பி. தாகூர் கூறுகையில்,

நிதிஷ் குமாருக்கு ஆதரவாக பேசிய சத்ருகன் சின்ஹா மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும். சத்ருகன் சின்ஹா கட்சியை விட்டு விலகுவதாக இருந்தால் நாங்கள் அவரை தடுக்க மாட்டோம் என்றார்.

பீகாரைச் சேர்ந்த சத்ருகன் சின்ஹா தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் பிரதமராகத் தகுதியானவர், அவர் பக்குவமான அரசியல் தலைவர், நல்ல மனிதர் என்று புகழ்ந்து பேசினார். கடந்த வாரம் அவர் நிதிஷ் குமாரை சந்தித்து அவரை நேரில் புகழ்ந்தார்.

இதையடுத்து தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.

English summary
The BJP said Wednesday that it will take action against actor-politician Shatrughan Sinha for saying that Bihar Chief Minister Nitish Kumar is “prime minister material”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X