For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏம்மா சானியா.... மாமா வீடு எங்கம்மா இருக்கு???!!

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஓகே.. ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை டெலிவரி செய்தாகி விட்டது.. இதனால் இனி என்னென்ன குழப்பம் வரப் போகிறதோ என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனர் பலர்.

நம்ம, அதாங்க டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸாவின் கணவர் சோயப் மாலிக்குக்கும் கூட அப்படியாப்பட்ட குழப்பம் வர நிறைய வாய்ப்புகள் உள்ளன.

காரணம், அவர் கண்ணாலம் கட்டியுள்ள சானியா மிர்ஸா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இந்த ஹைதராபாத் அடுத்த 10 வருஷத்துக்கு இரண்டு மாநிலங்களுக்குத் தலைநகராக இருக்கப் போகிறது.

காதில் அக்னிநட்சத்திரம் அமலாவின் 'நின்னுகோரி வர்ணம்' ஓடவிட்டபடி...கையில் வைத்திருந்த டீயைக் குடிக்க எத்தனித்தபோது, ஒரு ஈ வந்து விழப் பார்த்தது.. அப்போது, நமது யோசனையில் சோயப் மாலிக் எப்படி இதை பீல் பண்ணுவார் என்ற கற்பனையும் சேர்ந்து வந்து விழுந்தது... ஒரு வேளை இப்படி பீல் பண்ணுவாரோ.... படிங்களேன்..

உங்க நாட்டுல என்னம்மா நடக்குது?

உங்க நாட்டுல என்னம்மா நடக்குது?

சோயப் மாலிக் - ஏம்மா சானியா.. உங்க நாட்டுல என்னம்மா நடக்குது. ஏதோ பிரிவினை நடப்பதாக செய்தி வந்து விழுந்தது. உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. எப்போதும், எதையாவது பிரித்துக் கொண்டேதான் இருப்பீங்களா...

என்ன சொல்றீங்க மாமா...!

என்ன சொல்றீங்க மாமா...!

சானியா - என்ன சொல்றீங்க.. நாட்டுல பிரிவினையா.. திரும்பச் சொல்லுங்க...

மாமா வீடு எங்கம்மா இருக்கு....?

மாமா வீடு எங்கம்மா இருக்கு....?

சோயப் - இல்லை இல்லை.. அப்படிச் சொல்லலை, தப்பா நினைக்காதே. எங்க மாமனார் வீடு எங்கே இருக்குன்னு கேட்க வந்தேன். இந்தியாவில்தானே இன்னும் இருக்கு...

ஹலோ.. என்ன நக்கலா....!

ஹலோ.. என்ன நக்கலா....!

சானியா - ஹலோ.. என்ன நக்கல்ஸா... எங்க மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா அப்படின்னு ரெண்டா பிரிச்சுட்டாங்க. ஹைதராபாத்தான் இரு மாநிலங்களுக்கும் 10 வருஷத்துக்கு பொதுத் தலைநகர். மத்தபடி இந்தியாவைப் பிரிக்கலை....

அப்டியா.. அப்ப ஆந்திரா...!

அப்டியா.. அப்ப ஆந்திரா...!

சோயப் - அப்படியா.. அப்படீன்னா, இனிமேல் ஆந்திரா இருக்காதா...?

ஆமா... இருக்காது

ஆமா... இருக்காது

சானியா - ஆமா, இனிமேல் இருக்காகது. அதுக்குப் பதிலா தெலுங்கானா, சீமாந்திரா அப்படின்னு பிரிச்சுட்டாங்க.

பிரியாம இருந்திருந்தா நல்லாருந்திருக்குமே பிரியா...!

பிரியாம இருந்திருந்தா நல்லாருந்திருக்குமே பிரியா...!

சோயப் - அது சரி.. ஆனா பாரு. இந்த பிரிவினையால் என்ன பலன் கிடைக்கப் போகிறது. நம்ம நாடுகள் பிரியா ஒன்றாக இருந்திருந்தா நாமும் ஒரே நாடாக இருந்திருக்கலாம்ல....

ஆனா உனக்கு செஞ்சுரி கிடைச்சிருக்காதே டார்லிங்...!

ஆனா உனக்கு செஞ்சுரி கிடைச்சிருக்காதே டார்லிங்...!

சானியா - உண்மைதான். ஆனா நீங்க எங்க அணிக்கு எதிராகத்தானே நிறைய ரன் எடுத்திருக்கீங்க. நிறைய செஞ்சுரி போட்டிருக்கீங்க. அதெல்லாம் இல்லாம போயிருக்குமே.. பரவாயில்லையா...

வேற யாருடனாவது மோதியிருப்பேனே...

வேற யாருடனாவது மோதியிருப்பேனே...

சோயப்- கம் ஆன் டியர். இந்தியா இல்லாவிட்டால் என்ன வேறு நாட்டுடன் ஆடி ரன் குவித்திருப்பேனே...

சரி வேற பேசலாமே...

சரி வேற பேசலாமே...

சானியா - சரி இந்த டாப்பிக்கை விடுங்க வேற பேசலாம். தெலுங்கானா பத்திப் பேசலாமா...

சோயப் - கண்டிப்பா பேசலாம்...

வர்ட்டா...!

சானியா - பேசலாம்.. ஆனா ரொம்ப நேரமாகும் முழுக் கதையைச் சொல்ல.. பேசாம
www.tamil.oneindia.in போய் பாருங்க.. அங்க நிறையப் போட்ருக்காங்க.... நான் பிராக்டிஸுக்குக் கிளம்பறேன்.. பை...

English summary
The formation of Telangana as a new state is likely to raise some confusion for Shoaib Malik, the Pakistani cricketer who has married Indian tennis queen Sania Mirza, who hails from Hyderabad. Here is an imagined communication between the sporting couple on this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X