• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளவரசன் வழக்கிற்கு சிபிசிஐடி விசாரணை தேவையில்லை: அரசு வக்கீல்

By Siva
|

Ilavarasan's case: Father Ilango wants CBCID to investigate
சென்னை: இளவரசனின் வழக்கு விசாரணை பாரபட்சமின்றி நடந்து வருவதால் சிபிசிஐடி விசாரணை தேவையில்லை என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் மாவட்டம் செல்லாங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவை நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் காதலித்து திருமணம் செய்தார். தலித்தான இளவரசன் வன்னியர் பெண்ணை மணந்ததால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இந்நிலையில் திவ்யா தனது தாயுடன் இருக்க விரும்புவதாகக் கூறி அவருடன் சென்றுவிட்டனர்.

இதையடுத்து இளவரசன் தர்மபுர் அரசு கலைக்கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். அவரது உடலை இருமுறை பிரேச பரிசோதனை செய்தும் மரணத்திற்கான காரணம் குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இளவரசனின் தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

பிரேத பரிசோதனை ஒழுங்காக நடக்கவில்லை. அதனால் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இளவரசனின் மரணம் குறித்த ரயில்வே போலீஸ், அரூர் டி.எஸ்.பி. விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி சசிதரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளங்கோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர சுப்பு கூறுகையில்,

இளவரசன் இறந்து 1 மாதமாகியும் இன்னும் இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தீவிரவமாக உள்ளார்களே தவிர இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதை கண்டறிவதில் தீவிரம் காட்டவில்லை.

கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி தர்மபுரியில் நடந்த கலவரத்தில் 400 தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டன, அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தலித் மக்கள் என்பதால் போலீசார் பாரபட்சமாக நடக்கிறார்கள். ஆதலால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் மூர்த்தி வாதாடுகையில்,

இளவரசனின் வழக்கு விசாரணை பாரபட்சிமின்றி நடந்து வருகிறது. தர்மபுரி கலவரத்தில் சேதமடைந்த 400 வீடுகளுக்காக அரசு ரூ.7 கோடி இழப்பீடு வழங்கியதுடன், அவர்களுக்கு பசுமை இல்லம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இளவரசனின் மரணம் குறித்த வழக்கு உள்பட அனைத்து வழக்குகளின் விசாரணையும் பாரபட்சமின்றி நடக்கிறது. விசாரணை சரியான பாதையிலேயே செல்கிறது. அதனால் சிபிசிஐடி விசாரணை தேவையில்லை என்றார்.

இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

திவ்யாவுக்கு சம்மன்

இளரசன் மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் தனது விசாரணையை துவங்கி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் விசாரணை கமிஷன் அலுவலகம் உள்ளது.

இளவரசன் மரணம் தொடர்பான தகவல்களை அளிக்க விரும்புவோர் இது குறித்த விவரங்கள் அடங்கிய உறுதிமொழி பத்திரங்களை ஜூலை 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று விசாரணை கமிஷன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது உறுதிமொழி பத்திரங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

விசாரணை கமிஷனில் உறுதிமொழி பத்திரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 7ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

மேலும், நீதியரசர் சிங்காரவேலு வரும் 8ஆம் தேதி பகல் 11 மணியளவில் தர்மபுரி அரசு விருந்தினர் மாளிகையில் தனது முதன்மை அமர்வை நடத்துவார். அப்போது பொதுமக்களும், வழக்கறிஞர்களும், மாவட்ட வருவாய் மற்றும் போலீஸ்துறை அலுவலர்களும் இதில் பங்கேற்கலாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உறுதிமொழி பத்திரங்களை அளிப்பது குறித்து இளவரசனின் தந்தை இளங்கோ மற்றும் திவ்யாவுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Ilavarasan's father filed a petition in Madras high court seeking CBCID officials to investigate his son's death. But the government lawyer who appeared in this case told that since the investigation is going on in the right path, there is no need of CBCID investigation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more