For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்டி இளவரசர் பிறந்ததை அறிவித்த ‘இந்தியர்’: வேலை இழந்து, இந்தியா திரும்புகிறாரா..?

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் பிறந்ததை உலகுக்கு அறிவித்த அரண்மனை உதவியாளரான இந்தியர் பதர் அசீமின் விசா காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய இருப்பதால் அவர் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

சென்ற வாரம் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட்டுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த சந்தோசச் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்தியரான பதர் அசீம் என்ற 25 வயது இளைஞன் தான்.

இவர் இங்கிலாந்து அரண்மனையில் உதவியாளராக கடந்த ஓராண்டாக பணி புரிந்து வருகிறது. கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவரான இவரது விசா வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய இருகிக்கிறது. அவரது விசாவை மேற்கொண்டு நீட்டிக்க இயலாது என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனடிப்படையில் பார்த்தால், அவர் விரைவில் இந்தியா திரும்புவார் எனத் தெரிகிறது.

Indian footman’s visa expiring in October, may lose job

கொல்கத்தாவில் இயங்கிவரும் அயர்லாந்து நாட்டு தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் இங்கிலாந்தில் உள்ள நேப்பியர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பதர் அசீம் இங்கிலாந்து அரண்மனையில் உதவியாளராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசீம் அரண்மனையில் பணி புரிந்த போதும், அவரது பெற்றோர்கள் இன்னும் வறுமையில் கொல்கத்தாவில் ஒரு குடிசை வீட்டில் தான் வாடி விடுகின்றனர்.

English summary
Badar Azim, who attained celebrity status as the Queen’s footman entrusted with a key role in announcing the birth of the newest royal baby, could lose his coveted job if his visa, which expires in October, is not extended.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X