For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர்களின் மணி கண்ட்ரோல் சரியில்லையே!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பணத்தை சரியானபடி கையாளும் திறன் இந்தியர்களிடம் குறைவாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரபல கடன்அட்டை நிறுவனமான மாஸ்டர் கார்டு சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.

பொருளாதார வல்லரசான ஜப்பான் நாட்டு மக்கள் நிதி நிர்வாகத்தில் கடைசி இடத்தில் உள்ளனர். என்று நியூசிலாந்து நாட்டுக்காரர்கள்தான் நிதி நிர்வாகத்தில் திறன் படைத்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

ஆசிய – பசிஃபிக் நாடுகள்

ஆசிய – பசிஃபிக் நாடுகள்

ஆசிய - பசிஃபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 16 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்ட மக்களின் அடிப்படை நிதி நிர்வாகத் திறன், நிதி திட்டமிடல், முதலீட்டு அறிவு ஆகிய 3 பிரிவுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

நியூசிலாந்து நம்பர் 1

நியூசிலாந்து நம்பர் 1

நிதி நிர்வாகத்தில் சிறந்திருப்பது நியூசிலாந்து நாட்டுக்காரர்களே என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் சூப்பர்

சிங்கப்பூர் சூப்பர்

சிங்கப்பூர், தாய்வான் ஆகிய நாடுகள் இரண்டு மற்றும் 3ம் இடங்களில் உள்ளன. அவர்களின் நிதி நிர்வாகம் சூப்பராக இருக்கிறதாம்.

இந்தியாவிற்கு 15

இந்தியாவிற்கு 15

இந்த ஆய்வில் இந்தியாவுக்கு 15வது இடம் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு பணத்தை கண்ட்ரோல் செய்வதில் நாம் தடுமாறி வருகிறோம்.

திட்டமிடல் பரவாயில்லை

திட்டமிடல் பரவாயில்லை

ஒட்டுமொத்த கணக்கீட்டில் இந்தியர்கள் பின் தங்கியிருந்தாலும், நிதி திட்டமிடலில் இந்தியர்கள் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளதாக மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தெற்காசிய பிரிவு தலைவர் அரி சர்க்கார் தெரிவித்தார்.

ஜப்பானுக்கு கடைசி இடம்

ஜப்பானுக்கு கடைசி இடம்

பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பான் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

English summary
A survey by mastercard has revealed that India's money control is not in good shape
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X