For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் வழக்கு..யுனிடெக் எம்.டி.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

By Mathi
Google Oneindia Tamil News

SC notice to Unitech MD
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் சிபிஐ மனு மீது பதிலளிக்க யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்த்ராவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமத்தை யுனிடெக் நிறுவனம் முறைகேடாக பெற்றது.. யுனிடெக் நிறுவனத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா செயல்பட்டார் என்பது சிபிஐ வழக்கு. இந்த வழக்கில் சிபிஐ வழக்கறிஞர் ஏ.கே.சிங்குடன் யுனிடெக் எம்.டி.யான சஞ்சய் சந்த்ரா ரகசியமாக பேசிய டேப் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஏ.கே.சிங் நீக்கப்படுவதாக சிபிஐ அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் சஞ்சய் சந்த்ராவுக்கு ஏற்கெனவே வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி மற்றும் முகோபாத்யாயா பெஞ்ச் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சஞ்சய் சந்த்ராவுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
The Supreme Court Friday issued notice to Unitech Ltd managing director Sanjay Chandra on a CBI plea seeking cancellation of his bail for allegedly influencing public prosecutor A.K. Singh in the 2G case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X