For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொஞ்ச நேரம் காணாமல் போய் மறுபடியும் திரும்பி வந்த இன்சாட் 3டி!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட் இன்சாட் 3டி செயற்கைக் கோள் திடீரென தனது தகவல் தொடர்பை நிறுத்தியதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரும் பதட்டமடைந்து விட்டனர். ஆனால் மீண்டும் சில நிமிடங்களில் தொடர்பு கிடைத்ததால் அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்த செயற்கைக் கோள் ரூ. 200 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் எடை கிட்டத்தட்ட 2000 கிலோவாகும்.

கடந்த மாதம்தான் இது பிரெஞ்சு கயானாவிலிருந்து ஏரியான் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

தட்பவெப்ப மாற்றத்தைக் கணிக்க

தட்பவெப்ப மாற்றத்தைக் கணிக்க

இன்சாட் 3டி செயற்கைக் கோள், தட்பவெப்ப மாற்றம், இயற்கைப் பேரிடர் உள்ளிட்டவற்றைக் கணிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

இந்த செயற்கைக் கோள் திடீரென தாறுமாறாக சுழல ஆரம்பித்தது. அதிகப்படியான உயரத்திற்கும் போய் விட்டது. மேலும் ஹசனில் உள்ள மாஸ்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பும் அறுந்து போய் விட்டது.

மீண்டும் வந்த உயிர்

மீண்டும் வந்த உயிர்

இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பதட்டமடைந்தனர். செயற்கைக் கோள் செயலிழந்து தொலைந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் தொடர்பு கிடைத்ததால் விஞ்ஞானிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சாட்டிலைட் நல்லாருக்கு...

சாட்டிலைட் நல்லாருக்கு...

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், செயற்கைக் கோளுக்கு ஆபத்தில்லை. நன்றாக உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அது இயல்பாக செயல்படத் தொடங்கும் என்றனர்.

English summary
Minutes after the INSAT-3D satellite was launched last month to help forecast weather and predict natural disasters, scientists at the Indian Space and Research Organization (ISRO) were in nail-biting agony. The satellite, which weighs nearly 2000 kilos and costs 200 crores, exhibited "anomalous behaviour" - it started spinning at a much higher rate and then all communication between the satellite and the Master Control Facility at Hasan in Karnataka "was lost for a short duration," said ISRO Chairman K Radhakrishnan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X