For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் மேயர் தேர்தலில் போட்டியிடும் சென்னையில் பிறந்த இந்திய அமெரிக்கப் பெண்

By Siva
Google Oneindia Tamil News

Indian American announces bid to run for mayor in US city
லாஸ் ஏஞ்சல்ஸ்: சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்கரான சுஜா லோவென்தால் லாஸ் ஏஞ்சல்ஸின் 2வது பெரிய நகரமான லாங் பீச்சின் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார்.

சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்கர் சுஜா லோவென்தால். அவர் யுசிஎல்ஏவில் பி.ஏ. பொருளாதாரம், கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., யுஎஸ்சியில் கொள்கை, திட்டம் மற்றும் முன்னேற்றத்தில் டாக்டரேட் பட்டமும் பெற்றுள்ளார். அவர் கடந்த 2001ம் ஆண்டு லாங் பீச் யூனிபைட் பள்ளி மாவட்டத்தின் கல்விக் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைவராக இருந்த 2 ஆண்டுகளில் லாங் பீச் கல்வியில் சிறந்து விளங்கியது.

இதையடுத்து அவர் சிட்டி கவுன்சிலில் பதவி வகித்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக சிட்டி கவுன்சிலில் இருக்கும் சுஜா லாஸ் ஏஞ்சல்ஸின் 2வது பெரிய நகரமான லாங் பீச்சின் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார்.

English summary
Chennai-born Indian American Suja Lowenthal has announced her bid to run for Mayor of Long Beach, which is the second largest city in Los Angeles County of California in US.Currently serving her second term as City Council, Suja is pitted against five other candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X