For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேதர்நாத் கோயிலில் செப்.11 முதல் பூஜை: முதல்வர் அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டேராடூன்: இமாலய சுனாமியில் சேதமடைந்த கேதர்நாத் கோயிலில், செப்டம்பர் 11ஆம் தேதி முதல் பூஜைகள் தொடங்கும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் பகுதியில் கடந்த ஜுன் மாதம் பனிச்சிகரம் உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலியாகினர். அங்குள்ள புனித தலமான கேதார்நாத் ஆலயப் பகுதியும் பெரும் சேதமடைந்தன.

Kedarnath

இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் கோவில் முன்பு குவிந்திருந்தன. இவற்றை மீட்கும் பணிகளும், சேதமடைந்த கேதர்நாத் கோயிலை புணரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த கோயிலில் பூஜைகள் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயிலில் பூஜைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக உத்தரகாண்ட் முதலமைச்சர் விஜய் பகுகுணா, ஆலய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு, ''செப்டம்பர் 11ஆம் தேதியில் இருந்து கேதர்நாத் கோயிலில் பூஜைகள் மீண்டும் தொடங்கப்படும்'' என முதல்வர் தெரிவித்துள்ளார்

English summary
The Uttarakhand government in consultation with an eight-member Badrinath-Kedarnath Temple Committee (BKTC) on Friday decided to resume puja on September 11 at the Kedarnath temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X