For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திரா அரசு ஊழியர்களே வெளியேறுங்கள்... மிரட்டுகிறார் சந்திரசேகர் ராவ்

By Mathi
Google Oneindia Tamil News

Chandrasekhar Rao
ஹைதராபாத்: தெலுங்கானாவை விட்டு ஆந்திரபிரதேச அரசு ஊழியர்கள் வெளியேற வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சந்திரசேகர் ராவ், ஆந்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு இனி இங்கு வேலையே இல்லை.. அவர்கள் சொந்த மாநிலத்துக்கு போக வேண்டியதுதான்.. அவர்கள் இடத்துக்கு தெலுங்கானா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.. ஆந்திராவை சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என்றார்.

சந்திரசேகர் ராவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனமும் எழுந்துள்ளது, சந்திரசேகர் ராவின் இத்தகைய பேச்சால் கடைநிலை ஊழியர் ஒருவர் உயர் பொறுப்புக்கு வரக் கூடிய அபாயம் இருக்கிறது. இது ஆரோக்கியமான பேச்சு அல்ல என்று அரசு ஊழியர் சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டங்களை தூண்டிவிடும் வகையில் இந்த பேச்சு இருப்பதாகவும் அரசு ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
TRS president K. Chandrasekhar Rao on Friday dropped a bombshell stating that Andhra officials working in Telangana would have to go after the bifurcation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X