For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைதரபாத்தை யூனியன் பிரதேசமாக்க சந்திரசேகர் ராவ் கடும் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Telangana Rashtra Samithi chief says no to Hyderabad as Union Territory
ஹைதராபாத்: ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலப்பிரிவினைக்குப்பின் தெலுங்கானா மற்றும் சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக 10 ஆண்டுகளுக்கு தற்போதைய தலைநகர் ஹைதராபாத் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்கும் பொதுவான நிரந்தர தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றும் அல்லது ஹைதராபாத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி மற்றும் சீமாந்திரா பகுதி தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த கருத்தை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொள்ளவில்லை. 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் பொது தலைநகராக நீடிக்க ஆட்சேபனை இல்லை. ஆனால் ஹைதராபாத்தை நிரந்தர பொது தலைநகராகவோ, அல்லது அதை யூனியன் பிரதேசமாக மாற்றவோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஹைதராபாத் நிர்வாகம் தெலுங்கானா மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்றார்.

English summary
Telangana Rashtra Samithi (TRS) chief K Chandrasekhara Rao on Sunday ruled out accepting Hyderabad as union territory or a permanent joint capital of Telangana and Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X