For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரேசில் சிறைக்கலவரம்: கைதிகளைக் கொன்ற 25 காவலர்களுக்கு 624 ஆண்டுகள் சிறை

Google Oneindia Tamil News

25 Brazilian police officers sentenced in 1992 prison massacre case
பிரசிலியா: பிரேசில் சிறையில் கைதிகளுக்கிடையே மூண்ட கலவரத்தை அடக்கும் முயற்சியில் போலீசாரால் கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 25 போலீசாருக்கு 624 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ளது சாவோ பவுலோஸ் என்ற ஜெயில். இங்கு 1992-ம் ஆண்டு கைதிகள் இடையே பயங்கர கலவரம் உண்டானது. கலவரத்தை அடக்க போலீசார் கடும் முயற்சிகள் மேற்கொண்டனர். இந்தக் கலவரத்தில் சுமார் 111 கைதிகள் பரிதாபமாக பலியானார்கள். அவர்களில் 52 கைதிகள் போலீசாரின் குண்டடியில் பலியானவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

எனவே, போலீசார் மிகவும் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலே நடைபெற்ற வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 25 போலீஸ் அதிகாரிகளுக்கு தனித்தனியே 624 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை வழங்கப் பட்டுள்ளது.

English summary
A Brazilian court on Saturday sentenced 25 police officers to 624 years in prison each for their involvement in a massacre at a prison more than 20 years ago
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X