இந்தியர்கள் ‘முகமூடியில்’ வாழ்ந்த 6 பாகிஸ்தான் பெண்கள்: உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
லக்னோ: இந்தியாவில் அனுமதியின்றி பல ஆண்டுகளாக தங்கியிருந்த 6 பாகிஸ்தானிய பெண்களுக்கு நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் சார்பில் நோட்டீஸ் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை சட்டத்தின்படி, விசா காலம் முடிவடைவதற்கு 2 மாதம் முன்னதாக விசாவை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், பல வெளி நாட்டவர்கள் விசா காலம் முடிவடைந்த பின்னரும் பல சுற்றுலாப் பயணிகள் ரகசியமாக இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர்.
பணம் கொடுத்து தரகர்கள் மூலம் போலியான வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்ற அடையாளங்களை செயற்கையாக ஏற்படுத்தி இவர்கள் இந்தியர்களாகவே முகமூடியிட்டு வாழத் தொடங்கி விட்டனர். அரசு சலுகைகளையும் இவர்கள் சுலபமாக ஏமாற்றி பெற்று விடுகின்றனர். இவ்வாறு இந்தியாவில் குடியேறுபவர்களில் பாகிஸ்தானியர்கள் தான் அதிகம்.
சமீபத்தில் இத்தகைய அத்துமீறல்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, ஜம்மு - காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறி விட்ட பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் துவக்கின.
இதனையடுத்து, உத்தர பிரதேச மாநிலம் பால்லியா மாவட்டத்தில் மட்டும் 8 பாகிஸ்தானியர்கள் கள்ளத்தனமாக வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது.
அவர்கள் பற்றிய விவரமாவது, பிஹ்ரா ஹர்பூர் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வரும் இரு சகோதரிகள், பால்லியா மாவட்டத்தின் நக்ராவில் வசிக்கும் 4 பாகிஸ்தான் பெண்கள், பன்ஸ்தீ பகுதியில் வசிக்கும் ஒரு பாகிஸ்தான் பெண் மற்றும் சிக்கந்தர்பூர் பகுதியில் வசிக்கும் மற்றொரு பெண் ஆகியோர் ஆவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications