For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஸ்கிரீம் சாப்டுக்கிட்டே மீண்டும் ‘மேயர்’ ஆனதைக் கொண்டாடிய 4 வயது அமெரிக்கச் சிறுவன்

Google Oneindia Tamil News

நியூயார்க்: இரண்டாவது முறையும் தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மகிழ்ச்சியை ஐஸ்கிரீம் சுவைத்த படியே கொண்டாடினார் 4 வயது அமெரிக்க மேயர் ஒருவர்.

அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள சிறிய நகரமான டார்செட்டில் மக்கள் தொகையென்னவோ மிகவும் குறைவு தான்.

இங்கு பெரும்பாலும் குலுக்கல் முறையில் மேயர்களைத் தேர்ந்தெடுப்பது தான் வழக்கம். அப்படித்தான் கடந்த முறை வழக்கம் போல் அனைவரது பெயரையும் எழுதி குலுக்கலில் போட்ட போது, அதிர்ஷ்டவசமாக சிறுவன் ஒருவனின் பெயர் வந்தது.

3 வயஹ்டு மேயர்...

3 வயஹ்டு மேயர்...

அச்சிறுவனின் பெயர் ராபர்ட் பாபி. சென்ற வருடம் வயது 3 ஆன போதே, மேயராகி சாதனை புரிந்தான் இச்சிறுவன்.

குலுக்கல் முறை....

குலுக்கல் முறை....

இந்நகருக்கு தனி அரசோ அல்லது அரசு நிர்வாகமோ கிடையாது என்பதால், ராபர்ட்டின் பதவிக் காலம் முடிந்த பின்னர் மீண்டும் இம்முறை அடுத்த மேயரைத் தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தினார்கள்.

கதவைத் தட்டிய அதிர்ஷ்டம்...

கதவைத் தட்டிய அதிர்ஷ்டம்...

அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவு தட்டும் என்பது பழமொழி. ஆனால், தற்போது 4 வயதாகும் ராபர்ட்டுக்கோ அடுத்த முறையும் அதிர்ஷ்டம் கதவைத் தட்டியுள்ளது.

ஐஸ்கிரீம் கொண்டாட்டம்...

ஐஸ்கிரீம் கொண்டாட்டம்...

ஆம், இம்முறையும் ராபர்ட்டே டார்செட்டுக்கு மேயராகி உள்ளான். தான் வெற்றி பெற்ற செய்தியைக் கேட்ட ராபர்ட், ஐஸ்கிரீம் வாங்கி தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினானாம்.

இது நல்லாருக்கே...

இது நல்லாருக்கே...

நம்மூரில் காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள். ஆனால் டார்செட்டிலோ மேயர் போட்டியில் போட்டியில் 1 டாலர் செலுத்தி நகர மேயராக யார் வர வேண்டும்? என்பதை மக்கள் வாக்கு பெட்டிகளில் எழுதி போடுவது வழக்கமாம்.

English summary
Seasoned politician! A 4-year-old boy, who has not made it to pre-school yet, has been re-elected as the mayor of a US town.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X