• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாக். தாக்குதல்.. பாஜக தலைவர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை

By Mathi
Google Oneindia Tamil News
Advani and Manmohan singh
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியான சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மன்மோகன் சிங் பாஜக தலைவர்களை இன்று மாலை சந்தித்துப் பேச இருக்கிறார். அப்போது மத்திய அரசின் தற்போதைய மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விவரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

English summary
Prime Minister Manmohan Singh will meet top leaders of the BJP on Wednesday evening in an attempt to lower the political heat that scorched Parliament over the killing of five Indian jawans by Pakistani soldiers at the Line of Control in Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X