For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

Madras HC directs police to register criminal case against TNCA
சென்னை: சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸூக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான ஸ்டேடியத்தில் புதிய கேலரிகள் கட்டப்பட்டன. ஆனால் இந்த புதிய கேலரிகள் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அரசுக்குத் தெரிவித்து வெவ்வேறு துறைகளிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி பெற்றிருக்கிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உயிருடன் விளையாடி இருக்கிறது என்று ஜபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலர் மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸிடம் 2011ஆம் ஆண்டு புகார் மனு தாம் அளித்ததாகவும் அதன் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வாசுகி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

English summary
The Madras High Court directed Chennai Police to register a criminal case against the Tamil Nadu Cricket Association (TNCA) for allegedly suppressing facts to secure stability certificate to its stands to host IPL matches, which it had declared earlier as weak and old.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X