For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடிநாய் வளர்த்தால்... இனி, உங்க மீதி வாழ்க்கை ஜெயில்ல தான்: இங்க இல்ல பாஸ், இங்கிலாந்துல...

Google Oneindia Tamil News

லண்டன்: யாராவது பொதுமக்களை கடிக்கும் கடிநாய்களை வைத்திருந்தால், அவர்களுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வ்ர இருக்கிறது இங்கிலாந்தில்.

பொதுவாக நாய்க்கடி என்பது உலகலாவிய அளாவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாய்க்கடியால் பாதிக்கப் படுகின்றனர். பலர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள்.

அத்தகைய கொடூர நாய்களை வளார்க்கும் ஓனர்களுக்கு தண்டனை தந்தால், கடி நாய்த் தொல்லையை ஓரளவுக்கு குறைத்து விடலாம் என நம்புகிறது இங்கிலாந்து அரசு.

நாய்க்கடி சிகிச்சை...

நாய்க்கடி சிகிச்சை...

வருடந்தோறும் கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் நாய்க்கடி சிகிச்சை பெற்று வருகிறார்களாம் இங்கிலாந்தில். இங்கிலாந்தில் வருடந்தோறும் நாய்க்கடி வைத்தியம் மட்டும் 30 லட்சம் பவுண்டுகள் செலவாவது குறிப்பிடத்தக்கது.

பரிதாபப் பலி....

பரிதாபப் பலி....

கடந்த ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 பேர் நாய் கடித்ததினால் இங்கிலாந்தில் பரிதாபம பலியாகியுள்ளனர்.

உரிமையாளரே பொறுப்பு...

உரிமையாளரே பொறுப்பு...

நாய்களை தண்டிப்பதோடு அத்தகைய கடி நாய்களை சுதந்திரமாக உலவ விட்டு , பொதுமக்கள் பாதிப்படைய காரணமாக இருக்கும் உரிமையாளருக்கே அதிக தண்டனை வழங்க வேண்உம் என்பது பாதிக்கப்பட்டோரின் அறிவுறுத்தல்.

2 ஆண்டுகள் சிறை...

2 ஆண்டுகள் சிறை...

ஏற்கனவே, கடி நாய் வளர்ப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் வழங்கும் சட்டம் இங்கிலாந்தில் அமலில் உள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பு...

பொதுமக்கள் எதிர்ப்பு...

ஆனால், இந்தச் சட்டத்தால் திருப்தியடையாத பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். மேலும் தண்டனை அளவை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

புதிய சட்டம்....

புதிய சட்டம்....

இதனைத் தொடர்ந்து, இந்த சட்டத்தை திருத்தி, காயத்தை ஏற்படுத்திய நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையும், உயிரிழப்பை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்குவதை வகை செய்யும் புதிய சட்டத்தை இயற்ற இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது.

செப்டம்பர் ரிலீஸ்...

செப்டம்பர் ரிலீஸ்...

செப்டம்பர் மாதத்தில் இந்த புதிய சட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

English summary
Owners of dogs which kill could end up facing a lifelong prison sentence under new proposals from the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X