For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசாம் ‘காரமிளகாய்’ ஸ்பிரே: பாலியல் கொடுமைகளுக்கு டிஆர்டிஓ அறிமுகப்படுத்தும் புது ஆயுதம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் பெண்களுக்கெதிரான வன் கொடுமைகள் நாள்தோறும் பெருகிய வண்ணமே உள்ளன. ‘தனிப் பெண்ணொருத்தி நள்ளிரவில் தனியாக பாதுகாப்பாக செல்லும் போது தான் இந்தியா முழுமையாக சுதந்திரம் பெற்று விட்டதால அர்த்தம்' என இந்திய சுதந்திரத்தின் போது தெரிவித்தார் தேசப்பிதா மகாத்மா காந்தி.

ஆனால், இன்றோ நாடு காமக் கொடூரர்களின் கையில் சிக்கி அல்லாடுகிறது. சிறு குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் நடக்கும் பலாத்காரங்களைக் கேள்விப் பட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட இந்தியாவிற்கு சுற்றுலா வ்ருவதைக் குறைத்துக் கொண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன்.

இதை இப்படியே விட்டால், நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்து விடும் என அச்சப்பட்ட அத்திய அரசு, சட்டங்கள் பல போட்டுப் பார்த்தது. ஆனால், அவை இத்தகைய பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளுக்கு முடிவு கட்டவில்லை. அதனால், தற்போது அடுத்தகட்ட முயற்சியாக, ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பான (டிஆர்டிஓ) மூலம் புதிய தற்காப்பு ஆய்தம் ஒன்றை பெண்களுக்கு சாதகமாக அறிமுகப் படுத்தவுள்ளது.

உலகிலேயே அதிக காரமான மிளகாய் எனப் புகழ் பெற்ற அசாம் மாநிலத்தில் விளைவிக்கப் படும் கார மிளகாயைப் பயன்படுத்தி புதிய ஸ்பிரே ஒன்றை உருவாக்கியுள்ளனர் இவர்கள். தங்களுக்கு ஆபத்து என பெண்கள் உணரும் சமயங்களில் பெண்கள் இதனை குற்றாவாளிகள் மீது தெளித்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இயலுமாம்.

இத்தகவலை டெல்லி மேல்சபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ஏ.கே.அந்தோணி எழுத்து முலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். மேலும், தகுந்த சோதனைகளுக்குப் பிரகு டி.ஆர்.டி.ஓ வே இந்த கார மிளகாய் ஸ்பிரேயை முறைப்படி அறிமுகப் படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Defence Minister A.K. Antony on Wednesday informed that the Defence Research and Development Organisation (DRDO) has developed a chilli-spray for protection using the world's hottest chilli grown in Assam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X