For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்பாக்கம் அணு மின் நிலையத்தை போட்டோ எடுத்தவர் கைது ..திமுகவைச் சேர்ந்தவர்!

Google Oneindia Tamil News

Man arrested for taking photos of Kalpakkam reactor in Tamil Nadu
காஞ்சிபுரம்: சென்னை அருகே கல்பாக்கத்தில் உள்ள அணு மின் நிலையத்தை புகைப்படம் எடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து சில பென் டிரைவ்கள், ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம், பாவினி புரோட்டோடைப் அதி வேக ஈணுலை தொடர்பான 400 புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த நபரின் பெயர் சாபிர் அலி. கல்பாக்கம் அணு மின் நிலையத்தில்தான் பணியாற்றுகிறார். நேற்று இவர் பணிக்கு வந்தபோது அவரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் வழக்கம் போல பரிசோதித்தனர். அப்போதுதான் அவரிடமிருந்து இவை அனைத்தும் சிக்கின.

பின்னர் அவர் கல்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்கானிக்கல் என்ஜீனியரிங் டிப்ளமோ படிப்பை முடித்துள்ள சாபிர் அலி, ஒரு நிறுவனம் மூலமாக இங்கு ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது சொந்த ஊர் மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் ஆகும். திமுகவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சாபிர் அலி சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
A contract labourer at the Madras Atomic Power station at Kalpakkam in Kancheepuram Tamil Nadu has been arrested after some pen drives and a mobile phone that had over 400 photos of the BHAVINI Prototype Fast Breeder Reactor were seized from him, police said on Thursday. Shafir Ali was arrested on Tuesday by the Central Industrial Security Force (CISF) as they found in his possession pen drives and card readers while frisking him before letting him in for his daily duty, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X