For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைகள் கட்டப்பட்டு 14500 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெட்டிக்குள்... உயிருடன் ‘டேர்டெவில்’...!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சாகசங்கள் செய்வதற்கு மன உறுதி மட்டுமே மூலதனம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அமெரிக்க சாகச வீரர் ஒருவர்.

எப்படிப்பட்ட சிக்கலான நிலையில் இருந்தாலும், கண்ணிமைக்கும் பொழுதில் அவற்றிலிருந்து வெளிவந்து பார்வையாளர்களை ஆச்சர்யப் படுத்தும் இந்த சாகச வீரரை மக்கள் ‘டேர்டெவில்' என்றே செல்லமாக அழைக்கிறார்கள்.

மண்னில் சாகசம் செய்து அலுத்துப் போய் விட்டதாம் இவருக்கு. அதனால், இம்முறை இவர் தனது சாகசக் களமாக எடுத்துக் கொண்டது வானத்தை. கேட்டவர்களையும், பார்த்தவர்களையும் பதறச் செய்தது இவரது இந்த சாதனை முயற்சி...

இதல்லாம் எனக்கு ஜுஜூபி....

இதல்லாம் எனக்கு ஜுஜூபி....

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், ஷெபோய்கன் பகுதியை சேர்ந்த அந்தோனி மார்டின் (47)க்கு சாகசம் செய்வதெல்லாம் சகஜமான பொழுதுபோக்கு. சிக்கல்களை உடைத்து வெளி வருவது என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

கேட்கும் போதே கண்ணைக்கட்டுதே....

கேட்கும் போதே கண்ணைக்கட்டுதே....

அமெரிக்க மக்களால் செல்லமாக ‘டேர்டெவில்' என அழைக்கப் படும் அந்தோணி, கடந்த 25 ஆண்டுகளாக இது போன்ற சாகசங்களைச் செய்து வருகிறார். இவர் நேற்று முந்தினம் மேலும் ஓர் புதிய சாதனையை புரிந்துள்ளார். கேட்கும்போதே சிலருக்கு கண்ணைக் கட்டும் சாதனை அது.

அந்தரத்தில் பெட்டி...

அந்தரத்தில் பெட்டி...

கைகளை சங்கிலியால் கட்டிக் கொண்டு, தன்னை ஒரு பெரிய பெட்டிக்குள் அடைத்து வெளியில் பூட்டச் செய்து விட்டார். பின்னர் அந்த பெட்டியினை சுமார் 14500 அடி உயரத்தில் இருந்து விமானம் மூலம் கீழே போடச் செய்துள்ளார்.

பாராசூட்டுக்கே தலை சுத்திடுச்சாம்...

பாராசூட்டுக்கே தலை சுத்திடுச்சாம்...

பாதுகாப்புக்காக பெட்டியுடன் ஒரு பாராசூட் இணைக்கப்பட்டிருந்த போதும், வீசப்பட்ட வேகத்தில் பெட்டியின் வேகத்திற்கு பாராசூட்டால் தாக்குப் பிடிக்க இயலவில்லையாம்.

ஸ்கை டைவிங் வீரர்கள்...

ஸ்கை டைவிங் வீரர்கள்...

வானத்திலிருந்து பூமியை நோக்கி வரும் டேர்டெவில் இருந்த பெட்டி, நிலை தடுமாறி விடாமல் செங்குத்தாக இருக்க , பெட்டியோடு சேர்த்து 2 'ஸ்கை டைவிங்' வீரர்கள் கீழே குதித்தனர்.

இவரு ஸ்பீட் மேன்...

இவரு ஸ்பீட் மேன்...

அப்பெட்டி மணிக்கு 193 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. இடைப்பட்ட காலத்தில் அதாவது பெட்டி வானத்தில் இருந்து பூமியை அடையும் காலத்திற்குள் டேர்டெவில் தனது கை விலங்கை உடைத்து, பெட்டியைத் திறந்து பாராசூட்டை மாட்டிக் கொண்டு பறந்தது கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்து போய் விட்டனர்.

வெறும் 40 வினாடி தானா..?

வெறும் 40 வினாடி தானா..?

இதற்காக அவர் எடுத்துக் கொண்ட கால அவகாசம் வெறும் 40 வினாடிகள் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...?

எஸ்கேப் ஆர் டை...

எஸ்கேப் ஆர் டை...

டேர்டெவிலுக்கு இது 17வது சாகசம். அவரது வயதோ வெறும் 22 தான். எஸ்கேப் ஆர் டை என்ற தலைப்பில் இவர் சில புத்தகங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a stunt that seems like every claustrophobe’s worst nightmare, a daredevil successfully escaped from handcuffs and a locked box dropped from an airplane 14,500 feet in the air Tuesday — in less than a minute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X