For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சஸ்பென்ட்' ஐஏஎஸ் அதிகாரியை 'துர்காஜி'யாக்கிய ஊடகங்கள்: உ.பி. அமைச்சர் சாடல்!

By Mathi
Google Oneindia Tamil News

IAS officer has been glorified as 'Durgaji,' says Uttar Pradesh minister Azam Khan
ரேபரேலி: உத்தரப்பிரதேசத்தில் எத்தனையோ அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்ட போதும் ஊடகங்கள்தான் ஐஏஎஸ் அதிகாரி துர்காவை துர்காஜியாக வளர்த்துவிட்டிருக்கின்றன என்று அம்மாநில அமைச்சர் ஆசம் கான் சாடியுள்ளார்.

ரேபரேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு நிர்வாகத்தில் தலைமைப் பொறியாளர், நிர்வாக இயக்குநர் என அனைத்து மட்டத்திலும்தான் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஊடகங்களில் அதுபற்றி ஒருவரி கூட வந்தது இல்லை.

இந்த நாட்டில் 125 கோடி மக்கள் இருக்கின்றன. ஆனால் துர்கா போல ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான அதிகாரிகள்தான் இருப்பார்கள். அவர்கள் இல்லாமல் மற்றவர்களால் இந்த நாட்டை இயங்க வைக்க முடியாதா?

காங்கிரஸ் கட்சியானது தெலுங்கானா, உணவு பாதுகாப்பு மசோதாக்களை மனதில் வைத்துக் கொண்டு லாப நட்டக் கணக்குப் போட்டு அரசியல் செய்கிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது நாட்டின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது என்றார்.

English summary
Accusing the media of glorifying suspended Indian Administrative Service (IAS) officer Durga Shakti Nagpal, senior Uttar Pradesh minister Mohd Azam Khan said her case was highlighted while other such suspensions went unnoticed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X