For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாகூரில் ரம்ஜான் தொழுகையில் பங்கேற்ற லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்

Google Oneindia Tamil News

26/11 mastermind Hafiz Saeed leads Eid prayers in Lahore
லாகூர்: லாகூரில் நடந்த ரம்ஜான் பண்டிகை தொழுகை நிகழ்ச்சியில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தும் கலந்து கொண்டார்.

பாகிஸ்தானில் படு சுதந்திரமாக ஹபீஸ் சுற்றிக் கொண்டிருப்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக இது அமைந்துள்ளது. மும்பையில் நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகத் திகழ்ந்தவர் ஹபீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை ஒப்படைக்குமாறு இந்தியா தொடர்ந்து கோரி வரும் போதிலும் அதை பாகிஸ்தான் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது. தற்போது இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் தொடர் தாக்குல் நடத்திய நிலையில், ஹபீஸ் இன்று லாகூரில் நடந்த தொழுகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடந்த தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோருடன் ஹபீஸும் பங்கேற்றார்.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைத் அமெரிக்கா தடை செய்ததைத் தொடர்ந்து ஜமாத் உத் தவா என்ற பெயரில் புதிய பெயரில் இயங்கி வருகிறார் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hafiz Saeed, the mastermind of the 26/11 terror attacks in Mumbai, continues to roam freely in Pakistan despite India's repeated demands for his arrest and custody. Today, in what is likely to further strain the ties between the two countries, he led Eid prayers at the famous Gaddafi stadium in Lahore. Saeed's latest public appearance comes barely three days after five Indian jawans were killed in Jammu and Kashmir by heavily armed terrorists backed by the Pakistan Army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X