For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லைக்குள் சீன வீரர்கள்.. இந்திய வீரர்களுக்கு பீர் கொடுத்து ரசகுல்லா பெற்றுத் திரும்பினர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய மற்றும் சீனப்படையினருக்கு இடையே இந்த வாரத்தில் லேசான மோதல் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இரு தரப்பினரும் அமைதியாக திரும்பிச் சென்றதால் பிரச்சினை ஏற்படவில்லை.

இரு தரப்பும் பீர் மற்றும் ரசகுல்லாக்களைப் பரிமாறிக் கொண்டு அமைதியாகிப் போய் விட்டனர்.

பாகிஸ்தான் படையினர் இந்தியப் படையினர் மீது அடுத்தடுத்து 2முறை தாக்குதல் நடத்தி 5 வீரர்களின் உயிரைப் பறித்த நிலையில், இந்திய, சீன வீரர்களிடையே அமைதி ஏற்பட்டது ஆறுதல் தருவதாக உள்ளது.

Indian, Chinese troops exchange beer, rasagullas after face-off in Sikkim

சிக்கிமின் தங்கர் லா பாஸ்

சிக்கிம் மாநிலத்தில், தங்கர் லா பாஸ் என்ற இடத்தில்தான் இந்த சின்ன மோதல் ஏற்பட்டது.

16,000 அடி உயரத்தில்

கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் உள்ள எல்லைப் பகுதியாகும் இது. கிழக்கு சிக்கிமில் இது உள்ளது.

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன வீரர்கள்

இங்குள்ள இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அதிரடியாக நுழைந்ததால் இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்க ஆயத்தமானார்கள்.

2 வாகனங்களில்

சீன வீரர்கள் இரு வாகனங்களில் இந்திய எல்லைக்குள் நுழைந்ததை இந்திய வீரர்கள் பார்த்தனர். அப்போது இந்தியத் தரப்பில் 10 பேர் அங்கு இருந்தனர்.

தடுத்து நிறுத்தினர்

சீன வீரர்கள் வருவதைப் பார்த்த இந்திய வீரர்கள் உடனடியாக விரைந்து சென்று வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் திரும்பிச் செல்லுமாறு கொடி மூலம் சைகை காட்டினர்.

பீர் கொடுத்தனர்

இந்த நிலையில் சீன வீரர்கள் தங்களிடமிருந்த புட்வைஸர் பீர் பாட்டில்களை எடுத்து இந்திய வீரர்களிடம் கொடுத்தனர். அதைப் பார்த்த இந்திய வீரர்கள் தங்களிடமிருந்த ரசகுல்லா பாக்கெட்டை எடுத்து சீன வீரர்களிடம் கொடுத்தனர்.

அவரவர் வழியில் திரும்பினர்

அதன் பின்னர் சீன வீரர்கள் திரும்பிச் சென்றனர். இந்திய வீரர்களும் தங்களது நிலைக்குத் திரும்பினர்.

English summary
Indian and Chinese troops had a face-off in Sikkim earlier this week which, however, ended in a friendly exchange of beer and rasgullas. The face-off happened near the Tangkar La pass at the height of over 16,000 feet in eastern Sikkim after a Chinese patrol entered into territory claimed by India, sources told PTI here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X