For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபேஸ்புக் மூலம் 20 ஆண்டுகளுக்குப்பின்னர் குடும்பத்தோடு இணைந்த தஞ்சாவூர்காரர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர், தனது குடும்பத்தினரோடு 20 ஆண்டுளுக்குப் பிறகு இணைந்துள்ளார்.எல்லாம் பேஸ்புக்தான் காரணம்.

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விரக்திதியில் வீட்டை விட்டு கிளம்பிய அந்த நபர் பேஸ்புக்கின் உதவியால் தற்போது தனது குடும்பத்தினரோடு இணைந்துள்ளாராம்.

Facebook 'shares' help man reunite with family after 2 decades

நெல் வியாபாரத்தில் நஷ்டம்

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆர்.வி.நடராஜன். இவர் மொத்த நெல் வியாபாரம் செய்து வந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே ஊரை விட்டுக் கிளம்பினார்.

நாகர்கோவிலில் தஞ்சம்

ஊர் ஊராக சுற்றியலைந்த அவர் தெருவில் பேப்பர்களைப் பொறுக்கி விற்கும் வேலையில் இறங்கினார். நாகர்கோவிலில் தஞ்சமடைந்தார்.

போட்டோகிராபருடன் சந்திப்பு

7 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்ஜி என்ற புகைப்படக்காரரை சந்தித்தார் நடராஜன். ஜவஹர்ஜி ஒரு பத்திரிக்கையாளரும் கூட. அவர் நடராஜன் நிலையறிந்து உணவு, துணிமணி ஆகியவற்றைக் கொடுத்து உதவியுள்ளார்.

கம்ப ராமாயாணத்தில் பற்று

நடராஜனுக்கு கம்பராமாயணம் நன்கு தெரியும். தமிழ்ப் புராணங்களையும் நன்கு அறிந்துள்ளார். இது ஜவஹ்ஜியை ஆச்சரியப்படுத்தியது.

உடல்நலக்குறைவு

சில வாரங்களுக்கு முன்பு நடராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்து. அப்போது அவரைப் பார்க்கப் போனார் ஜவஹர்ஜி. அவரது குடும்பத்தினர் குறித்த விவரம் அப்போதுதான் அவருக்கு முழுமையாக தெரிய வந்தது.

பேஸ்புக்கில் போட்டோ

இதையடுத்து நடராஜின் புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டார் ஜவஹர்ஜி. அவர் குறித்த விவரத்தையும் போட்டார். தனது நண்பர்களுடனும் அதை ஷேர் செய்தார்.

கூகுள் மேப் மூலம்

இதைப் பார்த்த ஜவஹர்ஜியின் நண்பரான தங்கையா சீனிவாசன்என்பவர், நடராஜனின் ஊரில் அவரது வீடு குறித்த விவரத்தை அறிந்தார். அதை கூகுள் மேப் மூலம் கண்டுபிடித்து டேக் செய்தார்.

நடராஜன் நண்பர் கிடைத்தார்

மேலும் தங்கையாவின் உதவியால் அவரது நண்பர்கள் விமலநாதன், வெங்கட் ஆகியோர் நடராஜனின் நண்பர் மாலியைக் கண்டுபிடித்தனர்

நடராஜனின் குடும்பத்தினருக்குத் தகவல்

மாலிக்கு விஷயம் தெரிந்ததும் அவர் நடராஜினின் சகோதரிகளான இந்திராணி, தனலட்சுமியிடம் விவரத்தைக் கூற அவர்கள் ஜவஹர்ஜியை தொடர்பு கொண்டு நடராஜுனுடன் பேசி மகிழ்ந்தனர்.

நாகர்கோவில் விரைந்த குடும்பம்

இதையடுத்து நடராஜன் குடும்பத்தினர் நாகர்கோவில் விரைந்து வந்தனர். நடராஜனை 20 வருடங்களுக்குப் பிறகு சந்தித்து மகிழ்ந்தனர்.

சர்க்கஸில் வேலை பார்த்த நடராஜன்

நடராஜனிடம் பேசி மகிழ்ந்து சந்தோஷித்தனர். வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு நடராஜன் சர்க்கஸில் எல்லாம் வேலை பார்த்துள்ளார். ஆனால் அவர் வசம் இருந்த நான்கு யானைகள் இறந்ததால் அவரது சர்க்கஸ் வேலை பறிபோய் விட்டதாம். பின்னர்தான் பேப்பர் பொறுக்கும் வேலையில் சேர்ந்தார்.

திருவிழா

நடராஜனின்சகோதரிஇந்திராணி கூறுகையில் நடராஜன் திரும்பியிருப்பது எங்களுக்கு்த திருவிழா போல உள்ளது. மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

English summary
A ‘click’ and a few ‘shares’ on Facebook helped a man who ended up as a ragpicker here, reunite with his family two decades later on Thursda
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X