For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட பள்ளிகளுக்கு அறிவுரை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாட வேண்டும் என்றும் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கையும் விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சுற்றறிக்கையை பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனுப்பி வைத்துள்ளது.

சிறப்பாக கொண்டாட வேண்டும்

அதில் சுதந்திர தினத்தை அனைத்துப் பள்ளிகளும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்.

Schools get guidelines for Independence Day events

கண்காட்சி நடத்துங்கள்

சுதந்திர தினம் குறித்த கண்காட்சிகளை பள்ளிக்கூடங்கள் நடத்த வேண்டும்.

மரம் நடுங்கள்

மரம் நடும் நிகழ்ச்சியையும் தவறாமல் அனைத்துப் பள்ளிகளும் நடத்த வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகள் நடத்துங்கள்

மேலும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், கலைப் போட்டிகளை நடத்த வேண்டும்.

நாடகம் போடுங்கள்

மேலும் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த மேடை நாடகங்கள் நடத்தப்பட வேண்டும்.

அறிக்கை அனுப்புங்கள்

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னர் அதுதொடர்பான அறிக்கையை அனைத்துப் பள்ளிகளும் புகைப்படங்களோடு அனுப்பி வைக்க வேண்டுமாம்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

சுதந்திரப் போராட்டம், நாட்டுக்காக போராடிய தலைவர்கள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு புகட்டும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். வெறும் கொடியேற்றி, மிட்டாய் கொடுப்பதோடு நின்று விடக் கூடாது என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

English summary
The Directorate of School Education has sent detailed guidelines for the upcoming Independence Day celebrations in schools. The guidelines call for a host of activities including, exhibitions, tree planting, arts and sports competitions and stage events. After the event, schools will have to send a report on activities that they took up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X