For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயணிகளின் வசதிக்காக விரைவில், அனைத்து ரயிகளிலும் ‘வாட்டர் பியூரிபையர்’....

Google Oneindia Tamil News

டெல்லி: பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளைப் பொருத்த திட்டமிட்டுள்ளதாம் இந்திய ரயில்வே.

பொதுவாக ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு குடி தண்ணீர் தேவை ஏற்பட்டால், ஒன்று கையோடு கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால், சமீப காலங்களில் அவ்வாறு விலை கொடுத்து வாங்கப்படும் வாட்டர் பாட்டில்களும் சுகாதாரமானவையாக இருப்பதில்லை என அதிருப்தி தெரிவிக்கிறார்கள் ரயில் பயணிகள்.

எனவே, பயணிகளின் ரயில் பயணத்தை இனிமையாக்கும் பொருட்டு மேன்மேலும் பல வசதிகளைச் செய்து வரும் இந்திய ரயில்வே, தற்போது ரயில்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளைப் பொருத்தத் திட்டமிட்டுள்ளது.

வாட்டர் பியூரிபையர்...

வாட்டர் பியூரிபையர்...

முதல் கட்டமாக ஜலந்தர் ரயிலில் இந்த வாட்டர் ப்யூரிபையர் கருவி பொருத்தப் பட்டுள்ளதாகவும், விரைவில் அது செயல் பட ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார் மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர்.

சோதனை முயற்சி...

சோதனை முயற்சி...

மேலும், அதன் வெற்றியைப் பொறுத்து அடுத்தகட்டமாக சோதனை முயற்சி அடிப்படையில் நெடுந்தூர ரயில் பயணங்களில் இது மாதிரி குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்படும் ஐடியா இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எப்படிங்க எங்க ஐடியா...

எப்படிங்க எங்க ஐடியா...

தற்போது ரயில் குழாய்களில் வரும் நீர், ஆங்காங்கே நிரப்பப் படும் குடிநீரே ஆகும். இதனால் ஒரே தரமான குடிநீர் பயணிகளுக்குக் கிடைப்பதில்லை. இதனைக் களையும் பொருட்டே இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி திட்டமாம்.

என் சமையல் அறையில்....

என் சமையல் அறையில்....

ஏற்கனவே, ராஜ்தாணி மற்றும் சதாப்தி ரயில்களில் உள்ள சமையல் அறைகளில் வாட்டர் பியூரிபையர்ஸ் வெற்றிக்கரமாக செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுத்தமே எங்கள் தாரக மந்திரம்...

சுத்தமே எங்கள் தாரக மந்திரம்...

ரயில் பயணிகளுக்கு நல்ல சுத்தமான, சுகாதாரமான குடிநீரை வழங்குவதே இந்திய ரயில்வேயின் முக்கிய குறிக்கோள். அதற்காகவே, இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சுத்திகரிப்பு பணியாளர்கள்...

சுத்திகரிப்பு பணியாளர்கள்...

அதேபோல், ரஜ்தானி, சதப்தி, டொரோண்டோ போன்ற ரயில்களில் அவ்வப்போது ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்கு என ‘ஆன் போர்டு ஹவுஸ்கேபிங் சர்வீஸ் ( ஓ பி ஹெச் எஸ்)' என்ற பெயரில் பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு....

பின்குறிப்பு....

ஏங்க, நம்மாளுங்க ட்ரெயின் டாய்லட்ல இருக்கற கப்பையே கழட்டிட்டுப் போற நல்லவங்களாச்சே... வாட்டர் பியூரி பையருக்கு மறக்காம ரெண்டு செக்யூரிட்டி ஆபிசர் போட்டுடுங்க சார்...

English summary
In an effort to spruce up passenger amenities, Indian Railways has decided to install water-purifiers in coaches to improve the quality of drinking water and hygiene in trains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X