For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் போட்டோ போடுவது இஸ்லாத்திற்கு எதிரானது: மத குருமார்கள்

By Siva
Google Oneindia Tamil News

Posting pictures on Facebook, Twitter unIslamic: Clerics
டெல்லி: இந்திய இளைஞர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று மத குருமார்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாம் குறித்த சந்தேகங்களை தீர்த்து வைக்க உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இரண்டு ஹெல்ப்லைன்களின் தலைவர்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இருப்பது மார்க்கப்படி சரியா, தவறா என்று கேட்டு பலர் போன் செய்து வருகின்றனர்.

இது குறித்து சன்னி முஸ்லீம்கள் தலைவர் அப்துல் இர்பான் நைமுல் ஹலிம் பிராக்னி மஹ்லி செய்தியாளர்களிடம் போன் மூலம் கூறுகையில்,

ஒருவரின் முகத்தை ஃபேஸ்புக்கில் பார்க்க முடியாது. நிஜ வாழ்க்கையில் காதலை, அன்பை தேடுங்கள். ஆன்லைனில் தேடுவதில் பலனில்லை. வியாபார நிமித்தமாக ஒருவர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. பெண்கள் ஃபேஸ்புக்கில் நண்பர்களை தேடுவது சரியல்ல. அதிலும் அவர்கள் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றார்.

இது குறித்து ஷியா மௌலானா சைப் அப்பாஸ் நக்வி கூறுகையில்,

பெண்கள் தங்கள் தந்தை மற்றும் சகோதரர்களைத் தவிர வேறு யாருக்கும் தங்கள் முகத்தை காட்ட அனுமதி இல்லை. அதனால் ஃபேஸ்புக்கில் அவர்கள் புகைப்படங்களை வெளியிடுவது ஹராம். நாங்கள் யாரையும் கட்டுப்படுத்தவில்லை. நாங்கள் தாலிபான்கள் போன்று சிந்திக்கவில்லை. ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் இருக்கலாமா என்று இளைஞர்கள் கேட்டால் இருக்கலாம் என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் தங்கள் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடக் கூடாது. இஸ்லாம் பெண்களை புர்கா அணிந்து முகத்தை மறைக்குமாறு கூறுகிறது. அப்படி இருக்க அவர்கள் தங்களின் புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதை எப்படி அனுமதிக்க முடியும். ஆன்லைனில் பல உறவுகள் துவங்கி கசந்துபோனதை பார்த்திருக்கிறோம் என்றார்.

English summary
India's two prominent Islamic helplines are discouraging young callers, especially women, from creating profiles and posting pictures on popular social networking websites Facebook and Twitter on the ground that it is unIslamic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X