For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'இஸ்லாம் ஒரு நாடு'… டிவியில் டங்க் சிலிப் ஆன வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகினார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

‘Australian Sarah Palin’ withdraws from election race after stating ‘Islam is a country’
சிட்னி: இஸ்லாம் ஒரு நாடு, யூதர்கள் ஏசுவை வழிபட்டனர் என்று தப்புத்தப்பாக டிவி பேட்டியில் உளறிய பெண் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில், குவின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஒரு தொகுதியில் "ஒன் நேஷன்' கட்சி சார்பில் வேட்பாளராக ஸ்டெஃபானி பானிஸ்டர் (27) அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை ஒரு டிவி சேனல் பேட்டி கண்டு, ஒளிபரப்பியது. அதில்,‘இஸ்லாம் ஒரு நாடு என்ற முறையில் அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்களின் சட்டங்கள் ஆஸ்திரேலியாவில் வரவேற்கத்தக்கவை அல்ல'' என்று பேட்டியில் அவர் கூறினார்.

இஸ்லாம் மதத்தை ஒரு நாடு என்று அவர் தவறாகக் குறிப்பிட்டார். அதேபோல தடை செய்யப்பட்டது என்ற பொருளைத் தரக்கூடிய "ஹராம்' என்ற வார்த்தையை அவர் குரான் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியிருந்தார். மேலும், யூதர்கள் இயேசுவை வழிபட்டதாகவும் தவறாகக் கூறியிருந்தார். இதற்காக, ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பானிஸ்டரைப் பலரும் கிண்டல் செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட ஒன் நேஷன் கட்சியின் தலைவர் ஜிம் சாவேஜ், ""பானிஸ்டருக்கு எங்கள் கட்சி செயற்குழுவின் ஆதரவு எப்போதும் உண்டு'' என்று தெரிவித்தார்.

நம் ஊரில் எதிர்கட்சித்தலைவருக்கு அடிக்கடி டங்க் சிலிப் ஆவதை என்னவென்று சொல்வது. இரங்கல் தெரிவிக்கப் போய் நன்றி சொன்ன கதையை ஃபேஸ்புக்கில் போட்டு கிண்டல் செய்தார்களே அதற்காக அவர் பதவியை விட்டா விலகினார்? என்று கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

English summary
An Australian parliamentary election candidate with the anti-immigration One Nation party has quit the race following an embarrassing interview in which she called Islam a country, confused the Koran with “haram,” and said that Jews worship Jesus Christ.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X