For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டத்தில் பெண்களின் கூந்தலை அபேஸ் செய்யும் பலே கும்பல்: வெனிசுலாவில் பயங்கரம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வெனிசுலா: வெனிசுலா நாட்டில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களின் கூந்தலை ஆட்டையைப் போடும் கும்பல் அதிகரித்து வருகிறது.

நகையோ, பணமோ, விலை உயர்ந்த பொருட்களையோதான் கூட்டத்தில் திருடுவார்கள். ஆனால் கூந்தலை கத்தரி போட்டு திருடும் கும்பல் அதிகரித்து வருகிறது.

அதுவும் நீண்ட கூந்தல் உடைய பெண்களைக் கண்டால் துப்பாக்கி முனையில் மிரட்டி வெட்டி எடுத்துச் செல்கின்றனராம்.

கூந்தல் திருடர்கள்

கூந்தல் திருடர்கள்

வெனிசுலா நாட்டில் உள்ள மாராகைபோ நகரில் நூதனமான திருட்டு கும்பல் நடமாடுகிறது. அதாவது பெண்களின் நீண்ட கூந்தலை (தலை முடி) வெட்டி திருடுவது தான் இந்த கும்பலின் கைவரிசையாகும்.

வீடு புகுந்து வெட்றாங்கப்பா

வீடு புகுந்து வெட்றாங்கப்பா

இந்த கும்பல் வீடுகளில் புகுந்து பெண் நீண்ட தலைமுடியுடன் இருப்பதை கண்டால் இவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பிளேடினால் முடியை வெட்டி பையில் போட்டு எடுத்து சென்று விடுகிறார்கள்.

செயற்கை கூந்தல் அலங்காரம்

செயற்கை கூந்தல் அலங்காரம்

இதற்கு காரணம் என்னவென்றால் அழகு சாதன நிலையத்துக்கு சென்று செயற்கை சிகை அலங்காரம் செய்யும் மோகம் பெண்களிடையே அதிகரித்ததேயாகும்.

கூந்தல் வியாபாரம்

கூந்தல் வியாபாரம்

ஒரு பெண் இவ்வாறு நீண்ட கூந்தல் அலங்காரம் செய்ய சுமார் ரூ.25 ஆயிரம் (அதாவது 500 டாலர்கள்) செலுத்துகிறார்கள். எனவே இந்த கூந்தல் வியாபாரம் நல்ல லாபரகமான தொழிலாக மாறி விட்டதால் மர்ம கும்பல் கூந்தல் திருட்டில் இறங்கி விட்டார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பு

பெண்களுக்கு பாதுகாப்பு

எனவே இந்த விசித்திர திருட்டை தடுக்கவும், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக நகர மேயர் ரோகாலிஸ் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

திருட்டில் நம்பர் 3

திருட்டில் நம்பர் 3

இது ஒருபுறம் இருந்தாலும் சமீபகாலமாக வெனிசுலாவில் திருட்டு, வன்முறைகள் பெரும் அளவில் அதிகரித்து இருப்பதாக பாதுகாப்பு ஆய்வு மையம் கூறுகிறது. தலைநகர் டமாஸ்கஸ் உலகிலேயே அதிக வன்முறை நகரங்களில் 3-வது இடத்தை பிடித்து விட்டது என்றும் கூறுகிறார்கள்.

English summary
In the Venezuelan coastal city of Maracaibo, they're known as piranhas. But these aren't the flesh-eating fish found in some South American rivers.They're fast and ferocious thieves who residents say are increasingly attacking women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X