For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பிக்களை 'அராஜக கூட்டம்' என விமர்சிப்பதா? அன்சாரியை உலுக்கும் பாஜக!

By Mathi
Google Oneindia Tamil News

Rajya Sabha MPs protest Chairman Ansari calling them 'anarchists'
டெல்லி: எம்.பி.க்களை 'அராஜ கூட்டம்' என்று கூறியதால் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவர் தாம் பயன்படுத்திய அந்த வார்த்தையை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜ்யசபாவில் இன்று வழக்கம் போல கூச்சல், குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து எம்.பி.க்களை அமைதிப்படுத்தும் வகையில் ஹமீத் அன்சாரி, ஒவ்வொருநாளும் சபை விதிகள் முழுமையாகவே மீறப்பட்டு வருகின்றன. இந்த சபையை அராஜகவாதிகளின் கூட்டமாக நடத்த வேண்டும் என்று விரும்பினால் அது வேற விஷயம் என்றார்.

மேலும் பாஜக எம்.பி.க்கள் முதலில் கிஸ்த்வார் வன்முறை பற்றியும் பின்னர் ராபர்ட் வதேராவின் நில விவகாரமும் எழுப்பினர் என்று கூறினார்.

அவ்வளவுதான் பாரதிய ஜனதா எம்.பிக்கள் எழுந்து கொந்தளிப்போடு, அன்சாரி தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றனர். 'அராஜக கூட்டம்' என்ற வார்த்தையை திரும்பப் பெற்றாக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார். இதேபோல் அன்சாரி எந்த வித நிபந்தனையும் இல்லாமல் அன்சாரி தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

English summary
There was an uproar in the Rajya Sabha on Tuesday as Chairperson Hamid Ansari called MPs 'anarchists'. Coming out strongly at the MPs creating an uproar in the Rajya Sabha, Ansari said, "Every single day, rules and etiquettes are being violated. If we want the House to become a federation of anarchists, then it is a different matter."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X