For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைர பல் வளையம், இளம் பாய்பிரண்டுடன் வந்த மடோனா!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மென்டன்: பிரான்ஸ் இத்தாலி எல்லையில் அமைந்துள்ள அழகான மென்டன் நகருக்கு தனது காதலர் பிராகிம் ஸெய்பத் உடன் வருகை தந்த பாப் அழகி மடோனாவின் பற்களைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு வாய் பிளந்தனர். காரணம், அவரது பற்களில் காணப்பட்டிருந்த வைரத்தால் ஆன பல் வளையம்.

54 வயதாகும் மடோனா, பற்களை கட்டுக்கோப்பாக வைத்திருக்க போடப்படும் வளையத்தை, அதிலும் வைரத்தால் ஆன வளையத்தை மாட்டியிருந்தது பலரையும் முனுமுனுக்க வைத்தது.

தனது காதலரான பிராகிம் ஜெய்பாட்டுடன் மென்டன் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார் மடோனா.

வருடாந்திர இசை நிகழ்ச்சி

வருடாந்திர இசை நிகழ்ச்சி

தெற்கு பிரான்சிஸ், இத்தாலி எல்லைக்கு அருகே அமைந்துள்ளது இந்த கடலோர நகரம். அங்கு வருடா வருடம் இசை நிகழ்ச்சி நடைபெறும். இது மிகவும் பிரபலமானது. இதில் பங்கேற்கத்தான் மடோனா வந்திருந்தார்.

பேஷனுக்காக பல் வளையம்

பேஷனுக்காக பல் வளையம்

மடோனா மாட்டியிருந்த பல் வளையம் வழக்கமாக பல் எத்தியிருப்போர் அணியக் கூடியதாகும். ஆனால் மடோனா போட்டிருந்தது பேஷனுக்கானதாம்.

24 வைரக் கற்கள்

24 வைரக் கற்கள்

இந்த வைர பல் வளையத்தில் 24 வைரக் கற்கள் பொருத்தப்பட்டிருந்தன. நிஜமான பற்களுக்கு மேலே மாட்டப்பட்டிருந்தபோதிலும், அவரது நிஜப் பற்களும் வெளியே தெரியும் வகையில் இது மாட்டப்பட்டிருந்தது.

பற்களைக் காட்டியபடி

பற்களைக் காட்டியபடி

தான் போட்டிருந்த வைர பல் வளையம் வெளியே தெரியும் வகையில் ஈ என்று பற்களைக் காட்டியபடி வளைய வந்தார் மடோனா.

அடக்கம் ஒடுக்கமான உடையில்

அடக்கம் ஒடுக்கமான உடையில்

வழக்கமாக கவர்ச்சிகரமாக டிரஸ் போட்டு வரும் மடோனா இந்த நிகழ்ச்சிக்கு சற்றேக கவர்ச்சி குறைவான டிரஸ்ஸில் வந்திருந்தார்.

பாடவில்லை

பாடவில்லை

இந்த இசை நிகழ்ச்சியில் தனது தோழியர் சிலர் பாடுவதைப் பார்த்து ரசிக்கவே வந்திரு்நதாராம் மடோனா. அவர் இந்த நிகழ்ச்சியில் பாடல் எதையும் பாடவில்லை.

English summary
Madonna showed off her distinctive looking grills when she arrived in the south of France accompanied by boyfriend Brahim Zaibat. The 54-year-old singer was paying a visit to Menton, a picturesque coastal town close to the French-Italian border and site of the annual Festival de Musique de Menton – a celebration of classical music with performances from a range of global artists and symphony orchestras.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X