For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரமணன் 'சொன்ன' தென்சீனக் கடல் புயல் பிலிப்பைன்ஸையும் புரட்டி எடுக்குது!

By Mathi
Google Oneindia Tamil News

மணிலா: தமிழக மழையை உள்வாங்கிக் கொள்கிறது தென்சீனக் கடல் புயல் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியிருந்தார். அவர் சொன்ன புயல் தற்போது தென் சீனாவையும் பிலிப்பைன்ஸையும் பதம் பார்த்து வருகிறது.

தென் சீனக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால் இதுவரை இல்லாத அளவு மழை தென் சீனப் பகுதியிலும் பிலிப்பைன்ஸிலும் பதிவாகி இருக்கிறதாம். கொட்டும் கனமழையால் ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் மரங்கள் வேரோடு சாய்ந்து வீழ்ந்துள்ளன. கடல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Typhoon strikes south China after killing six in Philippines

விமானப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. ஹாங்காங் பங்குச் சந்தை வர்த்தகம் மூடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில்தான் பிலிப்பைன்ஸை பெரும் புயல் புரட்டிப் போட்டிருந்த நிலையில் தென்சீனக் கடலில் உருவான புதிய புயலும் மீண்டும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

English summary
A typhoon struck the south coast of China on Wednesday, forcing airlines to cancel flights and halting stock exchange trading in the financial centre of Hong Kong after leaving a trail of destruction in the Philippines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X