For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.ஆர்.சி.டி.சி.யின் புதிய சாதனை: ஒரே நாளில் 5.04 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்பனை

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 12ம் தேதி ஒரே நாளில் சுமார் 5.04 லட்சம் டிக்கெட்டுகளை விற்று புதிய சாதனை புரிந்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனம் ஐ.ஆர்.சி.டி.சி. இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப் படுகிறது. சமீபகாலமாக மிகவும் மந்தமான நிலையில் இயங்கி வந்தது இந்நிறுவனம்.

வருமானத்தைக் கூட்டும் வகையில் சமீபத்ஹ்தில் இது புனரமைக்கப் படது. புனரமைப்பு செலவு மட்டும் சுமார் 11 கோடி ரூபாயைத் தொட்டது. அதன் பிறகு ஐ.ஆர்.சி.டி.சி யின் வேகம் அதிகரித்ததால், அதிக வாடிக்கையாளர்கள் அதனைப் பயன் படுத்தத் தொடங்கினர்.

அதிக வேகம்...

அதிக வேகம்...

முன்பெல்லாம் நிமிடத்திற்கு சுமார் இரண்டாயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய இயலும் என்ற நிலை மாறி, தற்போது நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகள் பதிவு செய்யும் திறன் பெற்றது ஐ.ஆர்.சி.டி.சி.

அதிக வாடிக்கையாளர்கள்...

அதிக வாடிக்கையாளர்கள்...

அதேபோல், ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் இருந்து, தற்போது ஒரே நேரத்தில், 1.2 லட்சம் பேர் இணையதளத்தை பயன்படுத்தி டிக்கெட் எடுக்க முடியும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சாதனை...

சாதனை...

இந்நிலையில், கடந்த 12ம் தேதி, ஒரே நாளில் 5.04 லட்சம் டிக்கெட்டுகள், இந்த இணையதளத்தின் மூலம் இ-டிக்கெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை.

பழைய சாதனை முறியடிப்பு...

பழைய சாதனை முறியடிப்பு...

கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி இந்த இணையதளம் மூலம் 5.02 லட்சம் டிக்கெட்டுகள் இந்த இணையதளம் மூலம் பதிவு செய்யப் பட்டது. தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.

அதிக ஆன்லைன் டிக்கெட்டுகள்....

அதிக ஆன்லைன் டிக்கெட்டுகள்....

முன்பெல்லாம் நாளொன்றுக்கு சுமார் 3.85 லட்சம் டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட நிலை மாறி, தற்போது 4.30 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The e-ticketing website of Indian Railway Catering & Tourism Corporation Ltd (IRCTC), www.irctc.co.in, has booked the highest number of tickets in a day. The record booking of 5.04 lakh e-tickets have been achieved on August 12, 2013, as per a release. This is the second time it booked more than five lakh tickets. On March 1, 2013, the website had booked 5.02 lakh tickets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X