For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹவாய் கடலில் ‘ஹாயாக’ நீந்திய பெண்ணின் வலது கையை கடித்த ‘சுறா’

Google Oneindia Tamil News

ஹவாய்: ஹவாய் கடலில் நீந்திக் கொண்டிருந்த ஜெர்மன் பெண் பயணி ஒருவரின் வலது கையை சுறா கடித்ததால் அக்கடற்கரை தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது.

சமீபகாலமாக அமெரிக்காவின் ஹவாய் கடலில் சுறா தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மாயி என்ற இடத்திலுள்ள ஒயிட் ராக் கடற்கரை அருகே கடலில் நீந்திக் கொண்டிருந்தார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர்.

அப்போது திடீரென வந்த சுறாமீனின் தாக்குதலுக்கு ஆளானார். அதில் பரிதாபமாக அவரது வலது கை பறிபோனது. அவசர கால உதவியாளார்கள் வந்து அவரை மீட்பதற்குள் அவர் மயக்க நிலைக்கு போய்விட்டார். உடனடியாக மருத்துவமனைய்யில் சேர்க்கப்பட்ட அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

தொடரும் இது போன்ற சம்பவங்களால், கடற்கரை இரண்டு மைல் தூர அளவிற்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்த பின்னரே மீண்டும் கடற்கரையை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

English summary
A German tourist lost her arm in what appears to have been a shark attack off a Hawaiian beach on Wednesday, Maui County spokesman Rod Antone told the Honolulu Star Advertiser.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X