For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'டெல்'லில் இருக்கையிலேயே அமெரிக்க அரசின் உளவு ரகசியங்களை டவுன்லோட் செய்த ஸ்னோடென்

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: எட்வர்ட் ஸ்னோடென் டெல் நிறுவனத்தில் பணிபுரிந்தபோதே அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் திட்டம் குறித்த ஆவணங்களை டவுன்லோட் செய்திருக்கிறார்.

அமெரிக்கா பிற நாடுகளை உளவு பார்த்த விஷயங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் எட்வர்ட் ஸ்னோடன். அமெரிக்காவால் தேடப்படும் ஸ்னோடென்னுக்கு ரஷ்யா ஓராண்டுக்கு அடைக்கலம் தருவதாக கடந்த 1ம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் ஸ்னோடென் புலனாய்வு ரகசியங்களை எப்பொழுது தெரிந்து கொண்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

டெல் ஊழியர்

டெல் ஊழியர்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் கான்டிராக்டராக இருந்த எட்வர்ட் ஸ்னோடென் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு துவக்கம் வரை டெல் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லிலேயே டவுன்லோட்

டெல்லிலேயே டவுன்லோட்

ஸ்னோடென் அமெரிக்கா பிற நாடுகளை உளவு பார்த்த விஷயம் குறித்த ஆவணங்களை டெல் நிறுவனத்தில் பணிபுரிகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே டவுன்லோட் செய்துள்ளார் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

பூஸ் ஆலன் ஹேமில்டன்

பூஸ் ஆலன் ஹேமில்டன்

ஸ்னோடன் ஹவாயில் உள்ள பூஸ் ஆலன் ஹேமில்டன் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாகக் கூறி டெல் நிறுவனத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகினார். அவர் ஹேமில்டன் நிறுவனத்திற்கு சென்றதே மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள அரசு ஆவணங்களை டவுன்லோட் செய்து ஊடகங்களுக்கு வெளியிடத் தான்.

வேலை போனது

வேலை போனது

ஸ்னோடென் சில ரகசிய ஆவணங்களோடு ஹாங்காங்கிற்கு தப்பியோடிய பிறகு பூஸ் ஆலன் ஹேமில்டன் நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியது. ஸ்னோடென்னை வேலைக்கு அமர்த்தியது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாக ஹேமில்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Former NSA contractor Edward Snowden downloaded the US government's electronic spying programs while he was an employee of Dell. He downloaded the top secret document in april 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X