For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கம் விலை கூடியாச்சு.. அடுத்தபடியாக 'அண்ணன்' பெட்ரோல், 'தம்பி' டீசல்!

By Chakra
Google Oneindia Tamil News

Petrol price
மும்பை: டாலருக்கு தட்டுப்பாடு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சீனாவின் தங்க இறக்குதி, மத்திய அரசு போட்ட கணக்கு தப்பானது, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் பூமராங் ஆனது ஆகிய காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், தங்கத்தின் விலை அதிகரித்துவிட்டது.

இத்தோடு நிற்கப் போகிறதா நிலைமை.. இல்லையே..

இதோ அடுத்தபடியாக பெட்ரோல் விலையும் டீசல் விலையும் உயரப் போகிறது. 'இன்று நள்ளிரவு முதல் விலை உயர்வு அமல்' என்று விரைவிலேயே செய்தி வரப் போகிறது.

இது என்னாத்துக்கு?.. காரணம் இருக்கிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தான் நமது அன்னிய செலாவணியான டாலர்களில் பெரும் பகுதியை இந்தியா செலவழிக்கிறது. அடுத்த இடத்தைப் பிடிப்பது தங்கம் இறக்குமதி.

இப்போது ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவாகும் டாலர்களின் அளவு அதிகமாகிவிட்டது.

மேலும் உலகளவில் கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துவிட்டது. கடந்த 13ம் தேதி நிலவரப்படி ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை ரூ. 6,588 ஆக இருந்தது. ஆனால், 15ம் தேதி அது ரூ. 6,680.5 ஆகிவிட்டது.

இதனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியே ஆக வேண்டிய நிலைமைக்கு மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 வரையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1 வரையும் உயரும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.

டீசல் விலையை ரூ. 3 உயர்த்தினால் தான் அதன் இறக்குமதி விலையை சமன் செய்ய எண்ணெய் நிறுவனங்களால் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரேயடியாக விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதிக்காது என்று தெரிகிறது.

English summary
Be ready for another round of fuel price hike as oil firms are considering a proposal to increase prices of petrol and diesel. Petrol price is likely to cost Re 2 more per litre and diesel price is likely to go up by Re 1 a litre as the global crude price increased to 108.5 per barrel and the Indian rupee closed higher at 62on Friday, making imports costlier. In rupee terms, the crude price increased to Rs 6680.5 per barrel on August 15 as compared to 6588 per barrel on August 13, making a strong case for a fuel price hike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X