• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களைச் சுற்றி இங்கே, இதெல்லாம் நடந்தது தெரியுமா?

By Chakra
|

உலகெங்கும் கடந்த சில நாட்களில் நடந்த முக்கிய சம்பங்கள், நிகழ்வுகள் குறித்து படங்களுடன் கூடிய 'நியூஸ் பைட்' இது...

அரக்கோணம் வந்த நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம்:

அரக்கோணம் வந்த நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம்:

இந்திய கடற்படைக்காக அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட உளவு விமானம் இது. கடலில் நீண்ட தூரம் பறந்து கடற் பரப்பை கண்காணிக்கும் இந்த பி-81 விமானம் போயிங் நிறுவன தயாரிப்பாகும். குறிப்பாக எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடிக்கும் எலெக்ட்ரானிக் வார்பேர் டென்னாலஜி (Anti Submarine Warfare Aircraft) கொண்டது இந்த விமானம். இந்த விமானம் சென்னை அருகே உள்ள அரக்கோணம் விமானப் படைத் தளத்துக்கு முதல் முறையாக வந்திறங்கியபோது எடுத்த படம் இது.

நீர்மூழ்கி விபத்து.. கண்ணீரில் வீரரின் குடும்பம்:

நீர்மூழ்கி விபத்து.. கண்ணீரில் வீரரின் குடும்பம்:

மும்பை கடற்படைத் தளத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சிந்துரக்ஷக்கில் இருந்த கடற்படை வீரர் அதுல் சர்மாவின் மனைவி சுமன் சர்மா அம்ரிஸ்தரில் உள்ள தனது இல்லத்தில் கண்ணீருடன் காத்திருக்கும் படம். இந்த விபத்தில் அதுல் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

ஜமைக்காவின் தங்கமகள்:

ஜமைக்காவின் தங்கமகள்:

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 200 மீட்டர் பைனல்ஸ் போட்டியில் தங்கம் வென்ற ஜமைக்காவின் ஷெல்லி-ஆன் பிரேசர்- பிரைஸ் (வலதுபுறம்), வெள்ளிப் பதக்கம் வென்ற ஐவரிகோஸ்ட் நாட்டின் முரில்லி அகெளரே (இடது)

விண்ணில் நடந்த வீரர்கள்:

விண்ணில் நடந்த வீரர்கள்:

விண்ணில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தின் வெளியே நேற்று வானில் நடந்த ரஷ்ய விண்வெளி வீரர் பியோடோர் யுர்சிக்கின். இவரும் இன்னொரு வீரரான அலெக்சாண்டர் மிஸ்யூர்கினும் இணைந்து இந்த விண்வெளி மையத்தின் கட்டப்பட்டு வரும் புதிய ஆய்வகத்துக்கான கேபிள்களை இணைக்கும் பணியில் வானில் நடந்தபடி மேற்கொண்டனர்.

500 மீட்டர் ஓட்டப் போட்டி உலக சாம்பியன்:

500 மீட்டர் ஓட்டப் போட்டி உலக சாம்பியன்:

மாஸ்கோ சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 500 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்ற பிரிட்டனின் மோ பரா

அட, நம்ம ப.சிதம்பரம்...:

அட, நம்ம ப.சிதம்பரம்...:

டெல்லியில் நடந்த இந்திய பேட்மிட்டன் லீக் போட்டிகளை தனது மனைவி நளினியுடன் கண்டுகழித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

மின்னல் மனிதன் உசேன் போல்ட்:

மின்னல் மனிதன் உசேன் போல்ட்:

மாஸ்கோ சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 200 மீட்டர் அரையிறுதி ஓட்டப் போட்டியில் வென்ற ஜமைக்காவின் உசேன் போல்ட்

காஷ்மீரில் வெள்ளம்:

காஷ்மீரில் வெள்ளம்:

ஜம்மூ காஷ்மீர் மாநிலம் பூன்ஜ் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுரான்கோட் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார்

விஷமான பள்ளி உணவு:

விஷமான பள்ளி உணவு:

பிகார் மாநிலம் வைஷாலியில் பள்ளியில் தரப்பட்ட கெட்டுப்போன மதிய உணவை உண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்

பிரம்மபுத்திரா நதியில் டால்பின்:

பிரம்மபுத்திரா நதியில் டால்பின்:

அஸ்ஸாம் மாநிலம் சந்திராபூரில் பிரம்மபுத்திரா நதியில் இருந்து எட்டிப் பார்க்கும் டால்பின்

சூப்பர் ஸ்டார்.. சூப்பர் பைக்:

சூப்பர் ஸ்டார்.. சூப்பர் பைக்:

புனேவில் கேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய மோட்டர் சைக்கிளில் நடிகர் ஷாருக் கான்

காற்றில் கரைந்த கோடிகள்:

காற்றில் கரைந்த கோடிகள்:

நேற்று இந்திய பங்குச் சந்தையில் நடந்த 'ரத்தக்களறியால்' கம்ப்யூட்டர் மானிட்டரில் ஓடும் நம்பர்களை வெறுத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பங்குச் சந்தை புரோக்கர். நேற்று ஒரே நாளில் 700 புள்ளிகளை இழந்த மும்பை பங்குச் சந்தையில் பல்லாயிரம் கோடிகள் காற்றோடு கரைந்தன

அமர்நாத் கிளம்பும் சாதுக்கள்:

அமர்நாத் கிளம்பும் சாதுக்கள்:

அமர்நாத் புனிதப் பயணத்தைத் தொடங்கும் முன் ஸ்ரீநகரின் சிவன் கோவிலில் பூஜையில் ஈடுபட்ட சாதுக்கள்

ஆப்கான் குண்டுவெடிப்பு:

ஆப்கான் குண்டுவெடிப்பு:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பெரும் குண்டுவெடிப்பில் எரிந்து சாம்பலான கார். இந்த சம்பவத்தில் யாரும் பலியாகாதது தான் நல்ல செய்தி

லெபனான் கார் வெடித்து பற்றி எரியும் கட்டடங்கள்:

லெபனான் கார் வெடித்து பற்றி எரியும் கட்டடங்கள்:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த கார் வெடிகுண்டு வெடிப்பில் தீப்பற்றி எரியும் கட்டடங்கள். இதில் 15 பேர் பலியாயினர். ஏராளமான கார்களும் எரிந்துபோயின.

 
 
 
English summary
Maiden landing of Boeing P8I, a Long Range Maritime Reconnaissance and Anti Submarine Warfare Aircraft at Naval Air station Rajali, Arakkonam near Chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X