For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவேகானந்தர் ரதயாத்திரைக்கு நெல்லையில் வரவேற்பு

Google Oneindia Tamil News

நெல்லை: திருநெல்வேலிக்கு வந்த விவேகானந்தர் ரதயாத்திரைக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு அவரது பொன்மொழிகளை இளைஞர்கள் மத்தியில்பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த விவேகானந்தர் ரதயாத்திரைக்கு ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்துள்ளது.

Swami Vivekananda rath yatra in Nellai

இந்த ரதயாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் தொடங்கியது. அங்கிருந்து பல்வேறு ஊர்கள் வழியாக நேற்று நெல்லை வந்தது.

சங்கர்நகரில் விவேகானந்தர் ரதத்திற்கு பூர்ண கும்பமரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் பல்வேறு பள்ளிகளுக்கு சென்ற ரதத்திற்கு மாணவர்கள் விவேகானந்தர் போல வேடம் அணிந்து மலர் தூவி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து 2 வது நாளான இன்று காலை தச்சநல்லூர் வேதிக்வித்யாஷரம் பள்ளிக்கு கமலாஸ்மானந்தஜி தலைமையிலான ரதம் வருகை தந்தது. ரதத்தினை பள்ளி முதல்வர் ஸ்ரீவித்யா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர் பூரண கும்பமரியாதையுடன் மலர் தூவி வரவேற்றனர்,

பின்னர் அங்கு மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிநடைப்பெற்றது. தொடர்ந்து பண்பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிகளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, தொடர்ந்த ரதம் அங்கிருந்து பிரான்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு புறப்பட்டுசென்றது.

ஆகஸ்ட் 21ம் தேதி வரை நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் ரதயாத்திரை வலம் வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 13000 கிலோ மீட்டர் வலம் வரும் இந்த ரத யாத்திரை வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி சென்னையை வந்தடையும்.

English summary
Swami Vivekananda ratha yatra, organised as part of the 150th birth anniversary of Swami Vivekananda. The ratha yatra in Tirunelveli district six days (August 16-21), After covering 13,000 km in the State, it will culminate in Chennai on January 8, 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X