• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடனே சரத்குமார் பதவி விலக வேண்டும்.. ஜெ. அன்பழகன்

|

Sarath Kumar should be removed from president past: Producer J Anbalagan
சென்னை: தலைவா படப் பிரச்சினையில் நடிகர் சங்கத் தலைவராக சரத்குமார் என்ன முயற்சி எடுத்திருக்கிறார்... இவ்வளவு பெரிய பிரச்சினைக்குத் தீர்வு காணவும் அவர் முயற்சிக்கவில்லை. எனவே நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து சரத்குமார் உடனே விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் திமுக எம்.எல்.ஏ.வும், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், தயாரிப்பாளருமான ஜெ. அன்பழகன்.

இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக மக்கள் அனைவருக்கும் தற்போது தலைவா திரைப்படம் தேவை. தலைவா திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் தைரியம் எனக்கு இருக்கிறது.

நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் சரத்குமார் தலைவா பிரச்சனையில் என்ன முயற்சி எடுத்திருக்கிறார். முதலமைச்சரின் வலதாக இருக்கும் சரத்குமார் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார். இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு எவ்வித தீர்வு காணவும் முயற்சி செய்யாத சரத்குமார் நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும். வேறொருவர் அந்த பதவிக்கு வரவேண்டும்.

தலைவா திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் ரசிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். ரசிகர்களுக்காகத்தான் திரைப்பட கலைஞர்கள் வேலை செய்கிறோம். தியேட்டரில் படம் பார்ப்பதெற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கையில், திரைப்படம் எதில் வெளிவந்தாலும் பயமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது அன்பு பிக்சர்ஸ் மூலமாக தமிழகம் மற்றும் புதுவையில் 300 தியேட்டர்களில் தலைவா படத்தை தைரியமாக வெளியிட நான் தயார் என்று அதிரடியாக அன்பழகன் அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Producer and DMK MLA J Anbalagan has urged Sarath Kumar to resign his Actors association post in the wake of Thalaiva issue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more