For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப.சியின் '10 பாயிண்ட் ஆக்ஷன் பிளான்'.. மடமடவென அனுமதி தரப்பட்ட ரூ.1.1 லட்சம் கோடி திட்டங்கள்!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 10 பாயிண்ட் ஆக்ஷன் பிளானை உருவாக்குமாறு தனது துறையின் செயலாளர்களுக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.

நிதித்துறையின் கீழ் உள்ள 4 முக்கிய பிரிவுகளைச் சேர்ந்த செயலாளர்களுக்கும் இந்த உத்தரவை சிதம்பரம் பிறப்பித்துள்ளார்.

Finance Minister P Chidambaram seeks 10-point action plan to revive economy

இதையடுத்து சனிக்கிழமை முதலே செயலாளர்கள் தலைமையில் மூத்த அதிகாரிகளின் கூட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக அன்னிய முதலீடுகளை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கை கேட்டுள்ளார் சிதம்பரம்.

மேலும் சுமார் துறைமுகங்கள், நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே, ரியல் எஸ்டேட், மின்துறை, பெட்ராலியம், இரும்பு, விமானத்துறைகளில் ரூ. 1.1 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்யத் தயாராக இருந்தும், பல்வேறு தடைகளால் காத்துக் கொண்டிருக்கும் அன்னிய நிறுவனங்களின் பைல்களையும் சிதம்பரம் கையில் எடுத்துள்ளார்.

இந்தத் திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மின்துறையில் ரூ. 83,722 கோடி முதலீடுகள் வரவுள்ளன. இந்த முதலீடுகளால் 18 மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்பாட்டு வரும். இதனால் 15,636 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தியாகும்.

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 4,359 கோடி முதலீடு செய்யத் தயாராக உள்ள 4 நிறுவனங்களுக்கும் உடனடி அனுமதியை சிதம்பரம் வழங்கியுள்ளார்.

மேலும் ரூ. 7,103 கோடி மதிப்பிலான சட்டீஸ்கர், அஸ்ஸாம், மிசோகம் ரயில்வே திட்டங்கள், பாரத் பெட்ரோலியத்தின் வினியோகப் பிரிவில் ரூ. 1,419 கோடி முதலீடு, ஒரிஸ்ஸாவில் இரும்பு எஃகு துறையில் ரூ. 1,190 கோடி முதலீட்டுக்கும் சிதம்பரம் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

இது தவிர டெல்லி விமான நிலையத்தை ஒட்டி ஏரோ சிட்டியை உருவாக்கும் ரூ. 12,000 கோடி திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தின் நெருக்குதலால் கேபினட் செயலாளர் அஜீத் சேத் தலைமையிலான குழு ஒவ்வொரு துறையுடனும் பேசி இந்தத் திட்டங்களுக்கு இருந்தத் தடைகளை நீக்கி ஒப்புதலைப் பெற்றுள்ளது.

English summary
Center clears big-ticket investment projects worth Rs 1.1 lakh cr
 This special cell was set up at the insistence of Finance Minister P Chidambaram, who recognised the imperative to revive investor sentiment by getting some long held-up projects. Chidambaram had said the cell would examine 215 major projects worth Rs 7 lakh crore. These 215 projects comprise a sub-set of the total 341 stalled projects amounting to over Rs 10.5 lakh crore identified by the minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X