For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்ட்னர் அலிபாபாவுக்காக சீனாவில் இமெயில் சேவையை நிறுத்திய யாஹூ

By Siva
Google Oneindia Tamil News

Yahoo closes email services in China
பெய்ஜிங்: யாஹூ நிறுவனம் தன்னுடைய பார்ட்னர் அலிபாபாவுக்காக சீனாவில் இமெயில் சேவையை நிறுத்திவிட்டது.

யாஹூ நிறுவனத்தின் சீன பார்ட்னர் அலிபாபா. சீனாவில் ஆன்லைன் ஷாப்பிங் வியாபாரத்தில் ஜாம்பவான் இந்த அலிபாபா நிறுவனம். இந்நிலையில் யாஹூ தனது பார்ட்னரை ஆதரிக்கும் வகையில் சீனாவில் இமெயில் சேவையை நிறுத்தியுள்ளது.

யாஹூ இமெயிலை பயன்படுத்துவோர் தங்கள் கணக்கை அலிபாபாவின் அலிமெயிலுக்கு மாற்றிக்கொள்ளுமாறு அது யூசர்களை கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு அலிமெயிலுக்கு மாறியவர்களின் யாஹூ இமெயில் முகவரிக்கு 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை மெயில்கள் வரும்.

யாஹூவிடம் இருந்த அலிபாபாவின் 16 சதவீத பங்குகளை அந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் வாங்கிக் கொண்டது. இருப்பினும் அந்த சீன நிறுவனத்தில் யாஹூவுக்கு 24 சதவீத பங்குகள் உள்ளன. முன்னதாக யாஹூ கடந்த 2005ம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Yahoo has shut down its email services in China to support its partner online shopping giant, Alibaba.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X