For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன கொடுமை! நாடாளுமன்ற கேண்டீனில் டீ -ரூ1, சப்பாத்தி- ரூ1, சாப்பாடு- ரூ2, தோசை- ரூ4 தானாம்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் நகர்ப்புற, கிராமப்புற வறுமைக் கோடு தொடர்பான திட்டக் குழுவின் புள்ளிவிவரம் சர்ச்சையை கிளப்பிய போது சில அமைச்சர்கள் ரூ5க்கும் ரூ10க்கும் வயிறார சாப்பிடுவதாக சொன்னார்கள்.. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர்கள் 'உண்மையைத்தான்' பேசியுள்ளார்கள் என்கிறது நாடாளுமன்ற கேண்டீன் மெனு கார்டு!

உலகிலேயே மிகப் பெரிய முதியோர் இல்லம் என்று வர்ணிக்கப்படுவது இந்தியாவின் நாடாளுமன்றத்தைத்தான்! சராசரியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எம்.பிக்களாக வலம் வரும் இடம் நமது நாடாளுமன்றம்தான்!

இந்த எம்.பி.க்களுக்கு மாத ஊதியமாக ரூ80 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் வீடு, தொலைபேசி கட்டணம், மின்கட்டணம் என அனைத்திலும் சலுகைதான். இந்த சலுகைகளுக்கு அப்பால் எம்.பி.க்களுக்கான உணவிலும் கூட செம சலுகை..

நாடாளுமன்ற கேண்டீனில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை எவ்வளவு தெரியுமா? இதைப் படியுங்கள்..

ஒரு ரூபாய்க்கு டீ

ஒரு ரூபாய்க்கு டீ

நாடாளுமன்ற கேண்டீனில் டீயின் விலை ரூ1. சூப் விலை ரூ5.50

1 சப்பாத்தி ரூ1, சாதம்- ரூ2

1 சப்பாத்தி ரூ1, சாதம்- ரூ2

இந்த கேண்டீனில் 1 சப்பாத்தி விலை ரூ1தானாம்! சாதத்தோட ரேட்டும் கூட ரூ2 மட்டும்தானாம்! பாவம் எம்.பிக்கள் ஏழைகள் பாருங்க

தோசை ரூ4

தோசை ரூ4

நாடாளுமன்ற கேண்டீனில் ஒரு தோசையின் விலை ரூ4 மட்டுமாம்..

பிரியாணி ரூ8

பிரியாணி ரூ8

எம்.பிக்களுக்கான கேண்டீனில் பிரியாணி விலை ரூ8 என்றும் சிக்கன் பிரியாணி விலை ரூ34 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ரூ12.50க்கு வெஜ் தாளி

ரூ12.50க்கு வெஜ் தாளி

டால், சப்ஜி, 4 சப்பாத்தி, அரிசி, புலாவ், தயிர், சாலட் அடங்கிய வெஜ் தாளியோட ரேட் எவ்வ்ளோ தெரியுமா? வெறும் ரூ12.50 தான்.. அப்படின்னா அமைச்சர்கள் ரூ15க்கு சூப்பரா சாப்பிடலாம்னு சொல்லாமலா இருப்பாங்க..

நான் வெஜ் தாளி

நான் வெஜ் தாளி

நான் வெஜ் தாளியோட ரேட் ரூ22. தயிர் சாதம் ரூ11 க்கு கிடைக்கிறது.

மீன் சாப்பாடு

மீன் சாப்பாடு

மீன் ப்ளஸ் சாப்பாடு விலை ரூ13தானாம்!

சிக்கன், மீன் ரேட் எவ்ளோ?

சிக்கன், மீன் ரேட் எவ்ளோ?

நாடாளுமன்ற கேண்டீனில் மீன் வறுவல் ரூ17, சிக்கன் கறி ரூ20.50, சிக்கன் மசாலா ரூ24.50க்கு கிடைக்கிறது. பட்டர் சிக்கன் விலை ரூ37!

English summary
We all know the goverment provides subsidies for the members of the parliament. The subsidies involve telephone calls, air and rail fares, housing, water, electricity, personal assistants and highly subsidised food at the Parliamentary canteen according to the menu that is being widely shared on social media site Twitter. The Parliamentary menu throws light on the dishes our MP's fill their plates with. A vegetarian thali comprises of dal, subzi, chapatis, pulao, curd and salad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X