For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூசிலாந்தில் அமலுக்கு வந்த ஓரினச் சேர்க்கையாளர் திருமண சட்டம்: ஒரே நாளில் 50 திருமணங்கள்

Google Oneindia Tamil News

Gay marriage law comes into effect in New Zealand
வெல்லிங்டன்: நியூசிலாந்தில், கடந்த ஏப்ரல் மாதம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளார்களின் திருமணச்சட்டம், நேற்று முதல் அமல் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 50 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

ஏற்கனவே, நார்வே, சுவிடன், தென்ஆப்பிரிக்கா, கனடா, பெல்ஜியம், டென்மார்க் உள்ளிட்ட 13 நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் வாழும் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் நாட்டிலும் இது போன்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து போராடி வந்தனர்.

தொடர் போராட்டங்களின் விளைவாக, கடந்த ஏப்ரல் மாதம் ஓரினச்சேர்க்கையாளார்கள் திருமணத்தை அங்கீகரித்து நியூசிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கில் ஓரினச்சேர்க்கையாளார்கள் முன்பதிவு செய்தனர். அனுமதி கொடுக்கப்பட்டதோடு கிடப்பில் போடப்பட்ட சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 50 ஓரினச்சேர்க்கையாளர்கள் ஜோடி திருமணம் செய்து கொண்டது. ரோடோரூவா அருங்காட்சியகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்ட ராச்சல் பிரிஸ்கோ - ஜெஸ் இவெஸ் பெண் ஜோடியின் திருமணம் தான், நியூசிலாந்தில் நடந்த முதன் ஓரின சேர்க்கை திருமணம் என்ற வரலாற்று முக்கியவத்துவத்தைப் பெற்றுள்ளது.

ஓரின சேர்க்கையாளர் திருமணம் அமலுக்கு வந்ததை அடுத்து, ஓரினச்சேர்க்கையாளார் திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்த நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து 14-வது இடத்திலும், ஆசிய-பசிபிக் நாடுகள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய நாடுகளில் மறுக்கப்பட்ட சில ஓரினச்சேர்க்கையாளர்கள் கூட நியூசிலாந்தில் பதிவு செய்து திருமணம் செய்து வருகின்றனர்.

English summary
In April the New Zealand government passed the Marriage Amendment Act that enables couples to marry regardless of their gender or sexual orientation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X