For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

27 வயதில் 250கி எடையில் வாழ்ந்த குண்டு இளைஞர்... ஆபரேஷன் மூலம் 80கி குறைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ரியாத்: சவுதியில் குறைந்த வயதில் அதிக எடை கொண்டவராக வாழ்ந்து வந்த இளைஞரின் வயிற்றுப் பகுதியில் இருந்து ஆபரேஷன் மூலம் சுமார் 80 கிலோ அளவிலான கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது.

பொதுவாக குழந்தைகள் சிறுவயதாக இருக்கும் போது, கொழுக்..மொழுக் என இருக்க வேண்டும் என ஆசைப்படும் பெற்றோரே, அக்குழந்தைகளுக்கு வயது கூடக் கூட உடல் பருமனால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து, டயட் மூலம் எடையைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

ஆனால், சவுதியில் உடல்பருமன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு டயட் எல்லாம் கை கொடுக்கவில்லையாம். தற்போது 27 வயதாகும் அவருக்கு ஆபரேஷன் மூலம் எடை குறைப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றனவாம்.

உடல் பருமன் நோய்....

உடல் பருமன் நோய்....

சவுதியைச் சேர்ந்த காலித் பின் மோஷின் ஷைரி என்பவர் 5 வயதாக இருக்கும்போதுதான் உடல் பருமன் நோயால் பாதிக்கப் பட்டிருப்பது பெற்றோருக்குத் தெரிய வந்தது.

டயட் ப்ளீஸ்....

டயட் ப்ளீஸ்....

அதுவரை அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாத அவனது பெற்றோர், பின்னர் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளை விதித்தனர். அதுவும் கை கொடுக்காத நிலையில் நவீன உடற்பயிற்சிகள், மருத்துவ முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், காலித்தின் உடல் எடை தான் குறைந்த பாடில்லை.

3 மடங்கு எடை அதிகம்....

3 மடங்கு எடை அதிகம்....

தொடர்ந்து கூடிக் கொண்டே போன எடையால், 27 வயதில் சிக்ஸ்பேக் இளைஞனாக வலம் வர வேண்டிய காலத்தில் 250 கி எடையில் மாமிச மலையாக நடமாடினார் காலித். அது சராசரியாக அந்த வயதில் இருக்கவேண்டிய எடையை விட மூன்று மடங்கு அதிகம் என்பதை உணர்ந்தார்.

உயிருக்கே ஆபத்து....

உயிருக்கே ஆபத்து....

இதனையடுத்து, நடந்து செல்வதற்கு கூட சிரமப்பட்ட காலித், சக்கர நாற்காலியின் உதவியை நாட வேண்டியதாகி விட்டது. இந்நிலை தொடர்ந்தால் உயிருக்கே ஆபத்து என எச்சரித்தனர் மருத்துவர்கள்.

கிரேன் உதவியுடன்...

கிரேன் உதவியுடன்...

விஷேச கிரேன் மூலம் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காலித்க்கு, அங்கு பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட படுக்கை காத்துக் கொண்டிருந்ததாம்.

ஆபரேஷன் தான் தீர்வு...

ஆபரேஷன் தான் தீர்வு...

உடல் எடையைக் குறைக்க ஒரேவழி ஆபரேஷன் தான் என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, காலித் ரியாத்தில் உள்ள மன்னர் ஃபாத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஓவர் கொழுப்பு தான்...

ஓவர் கொழுப்பு தான்...

ஆபரேஷனுக்காக சில விஷேச கருவிகள் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப் பட்டன. சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெற்ற இந்த ஆபரேஷனின் மூலம் அந்த வாலிபரின் வயிற்றில் இருந்து 80 கிலோ கொழுப்பு அகற்றப்பட்டது.

இன்னும் ஸ்லிம் ஆகிடுவாரு...

இன்னும் ஸ்லிம் ஆகிடுவாரு...

ஆபரேஷனைத் தொடர்ந்து, அடுத்து வரும் 6 மாதங்களில் காலித்தின் எடை மேலும் மேலும் 60 முதல் 70 கி வரை குறைய வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

English summary
After successfully removing excess fat from a 250-kilogram man, surgeons at the King Fahd Medical City in Riyadh have a more enormous task coming.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X