For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெச்-1 பி விசா விதி கடுமையானால் க்ரீன் கார்டு வாங்கித் தர தயாராகும் ஐடி நிறுவனங்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஹெச்-1பி விசா விதிகளில் அமெரிக்காவின் கெடுபிடி அதிகரிக்கும் நிலையில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு க்ரீன் கார்டு ஸ்பான்ஷர்ஷிப் முறையை அதிகமாக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பணிபுரிவோருக்கான ஹெச்-1 பி விசா விதிகளை கடுமையாக்கும் வகையில் அந்நாடு சட்டம் கொண்டுவர இருக்கிறது. அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய பணியாளர்களில் பெரும்பாலானோர் ஹெச்-1பி விசா பெற்றவர்களே. உதாரணமான அமெரிக்காவில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் 90% ஊழியர்கள் ஹெச்-1 பி விசா பெற்றவர்களே.

H-1B curbs: IT companies may sponsor more green cards

தற்போது இந்த ஹெச்-1 பி விசா விதிகளை அமெரிக்கா கடுமையாக்கினால் க்ரீன் கார்டு ஷ்பான்ஸர்ஷிப்பை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குப் பெற்றுத்தரக் கூடும் என தெரிகிறது. இந்த க்ரீன் கார்டு விண்ணப்பத்துக்கான கட்டணம் 2 ஆயிரம் டாலருக்கு அதிகமானதாகும். அத்துடன் ஹெச்-1 பி விசா வைத்திருப்போரை விட க்ரீன் கார்டு வைத்திருப்போருக்கான பலன்களும் அதிகம். அவர்கள் எளிதில் தங்களது பணிபுரியும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ள முடியும்.

மேலும் க்ரீன் கார்டு வைத்திருப்போரின் சராசரி சம்பளமானது 15 ஆயிரம் டாலர் முதல் 20 ஆயிரம் டாலர் வரையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Indian IT companies are likely to step up sponsorship of green cards once the US tightens H-1B visa rules, enabling more Indians to settle abroad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X