For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெங்காயத்தை ஏற்றுமதி செய்துட்டு அப்புறம் விலை ஏறிப்போச்சுன்னு ஏன் இறக்குமதி செய்யணும்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வெங்காயம் விலையை கேட்டாலே கண்ணில் தண்ணீர் வருவதால் வீட்டில் வெங்காயம் வாங்க தடாதான். அதனால் வெங்காயம் என்று சொல்லிவிட்டு சாம்பார் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இல்லத்தரசிகள்.

இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வர்த்தக அமைச்சகம், ஏற்றுமதிக்கான ஒரு டன் வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையை, 650 டாலராக நிர்ணயித்துள்ளது. இதன்படி, இந்த விலைக்கும் கீழ், வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது.

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, வெங்காயம் வரத்து இல்லாததால், கடந்த சில வாரங்களாக, இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒரு கிலோ ரூ.100

ஒரு கிலோ ரூ.100

நாட்டின் முக்கிய நகரங்களில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. சில்லறை விலையில் ரூ.100 ஐ கூட எட்டியது வெங்காயம்

அதெல்லாம் முடியாது

அதெல்லாம் முடியாது

இந்நிலையில், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்க முடியாது என, வேளாண்மைத்துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதேசமயம் வெங்காயம் விலை உயர்வை சமாளிக்க, சீனா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து அதை இறக்குமதி செய்ய அனுமதிப்பதென, மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.

வெங்காய பிரச்சினை

வெங்காய பிரச்சினை

வெங்காயம் பிரச்னை குறித்து ஆராய, மத்திய அமைச்சகங்களின் உயரதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின் படி, இறக்குமதியாகும் வெங்காயத்தை ஆய்வு செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.

பதுக்குறாங்கப்பா!

பதுக்குறாங்கப்பா!

வெங்காயம் விலையேற்றத்திற்கு, பதுக்கல் தான் முக்கிய காரணம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டதாக, மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டன்னுக்கு 650 டாலர்

டன்னுக்கு 650 டாலர்

இத்துடன், வெங்காயம் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயிக்க, மத்திய அரக்கு பரிந்துரைப்பது என, தீர்மானிக்கப் பட்டது. இதையடுத்து ஏற்றுமதிக்கான ஒரு டன் வெங்காயத்தின் குறைந்தபட்ச விலை, 650 டாலராக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தட்டுப்பாடே காரணம்

தட்டுப்பாடே காரணம்

கடந்த மே மாதம், விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதி மீதான குறைந்தபட்ச விலையை முற்றிலுமாக நீக்கியது. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் மீது குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வெங்காயம்

வெளிநாட்டு வெங்காயம்

இறக்குமதி விதிமுறை சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், சீன,எகிப்து வெங்காயங்களை விரைவில், இந்திய சந்தைகளில் காணலாம். அது சரி நம் ஊர் வெங்காயத்தை ஏற்றுமதி செய்துவிட்டு எதுக்கு வெளிநாட்டு வெங்காயத்தை இறக்குமதி செய்யணும்? டாடி எனக்கு ஒரு டவுட்டு? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறதா?

English summary
The Commerce Ministry has notified imposition of a minimum export price (MEP) of USD 650 per tonne on onion to curb shipments and control rising prices
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X