For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அயோத்தியில் பதற்றம்- 70 வி.ஹெச்.பி தலைவர்களுக்கு எதிராக அரெஸ்ட் வாரண்ட்- கொடி அணிவகுப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ/பைசாபாத்: அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தடையை மீறி யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது. அயோத்தியில் இன்று பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் 25-ந் தேதி முதல் அயோத்தி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் யாத்திரையை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் மாநில அரசோ இந்த யாத்திரைக்குத் தடை விதித்தது.

Ayodhya

இருப்பினும் தடையை மீறி யாத்திரையை நடத்துவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அறிவித்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இன்று பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எதிராக கைது வாரண்ட்டையும் மாநில அரசு பிறப்பித்துள்ளது.

English summary
Even as security forces on Friday conducted flag march in Ayodhya in view of VHP's yatra, the Faizabad district administration issued arrest warrants against 70 VHP leaders. The proposed yatra, due to start from August 25, has already been banned by the state government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X